தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் ....!

தமிழக சட்டசபை இன்று கூடுகின்றது. பட்ஜெட் தாக்கல் தமிழக பிரச்சனைகள் இன்று எழுப்பபடும் என  எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது போல்  தமிழக அரசு பட்ஜெட்  தாக்கலில் நிறைய சலுகைகள்  அறிவிக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் பட்ஜெட் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை  அடுத்த வரும் மக்கள்  அவை  தேர்தல் நெருங்கும் வேளையில்  தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்  முக்கியத்துவம் பெறுகின்றது. 



தமிழத்தில் தற்பொழுதைய பிரச்சனையான சிவகாசிப் பட்டாசு தொழிற்சாலைப் பிரச்சனை குறித்து பேச எதிர்க்கட்சிகள்  எழுப்ப திட்டம்முட்டுள்ளன.  கஜா புயல் நிவாரணப் பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் கால சலுகையாக சிறப்பான அறிவிக்கைகள் அனைத்து   அறிவிக்கப்பட்டும் என்ற  எதிர்ப்பார்ப்பும் இருக்கின்றது. 

பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 15 ஆம்  தேதி வரை சட்டப்ப் பேரவை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பட்ஜெட் ஹைலைட்ஸ்:

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடி ஒதுக்கீடு செய்ய அறிவிப்பு

10 ஆயிரம் மாணவர்களின் உயர்நிலை தொழிநுட்ப பயிற்சியினைப்  மேம்படுத்த கழக்கத்துக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு

சாதரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு  ரூபாய் 1800 சன்ன ரக நெல்லுக்கு ரூபாய் 1830 தொகையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின்  பெயர் கொண்டு கல்லுரி அமைக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்குறைக்கு ரூபாய் 10, 550 கோடி ஒதுக்கீடு

தமிழக பல்கலைகழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மீன்ப்பாக்கம் முதல் கிளாம்பாகம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிக்க ஆய்த்தப் பணிகள் தொடங்கப்படும் . 

நகர்புற பொருளாதாரத்தில் பிந்தங்கியோர்க்கு   ரூபாய் 5000 கோடி ஒத்ய்க்கீசு செய்யப்பட்டுள்ளது. 2030 ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை வெளியிட அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் தொடங்கி செயல்படுத்த ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 1, 132 கோடி செலவுல் நிள சாலை சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கோடி  உழவர்களின் உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ரூபாய் 1368 கோடி தொகையானது 2 லட்சம் ஹெக்டேர் பரப்பில்  பாசன திட்டத்திற்கு வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் 2698 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments