இந்தியாவில் வரப்போகுது எலக்டிரானிக் பஸ் இந்தியாவிலுள்ள 6 நகரங்களுக்கு 255 மின்சாரத்தால் இயங்கும் பஸ்களை டாட்டா மோட்டார்ஸ் வழங்கவுள்ளது.
சுற்றுசூழல் பாதுகாப்பை காக்கும் வகையிலும் பெருகி வரும் பெட்ரோல் தேவையை மனதில் வைத்து அரசு எலக்டிரானிக் வாகனங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இதனை அடுத்து வெளியிடப்பட்ட 10 நகர எலக்ட்ரிக்
பஸ்களுக்கான டெண்டர்கள் டாட்டா வசம் சென்றது.
டெண்ட்கர்களை வென்றுள்ள டாட்டா நிறுவனம் இந்தியாவில் கொல்கத்தா, இந்தூர், லக்னோ, ஜம்மு, அசாம், ஜெய்ப்பூர் ஆகிய ஆறு நகரங்களுக்கு எஸ்டியு எலக்டிரனிக் பஸ்களை வழங்கும் டெண்டர்களை பெற்றுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் லக்னோ போக்குவரத்து கழகங்களுக்கு பஸ்களை டெல்விவரி செய்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
டாட்டா நிறுவனம் சப்ளை செய்யவுள்ள எலக்டிரானிக் சிட்டி பஸ்கள் டாட்டா அல்ட்ரா இவி9 மீட்டர் எலெக்ட்ரிக் பஸ்களாகும்.
லித்தியத்தால் இயங்கும் பேட்டரிகளை கொண்டு 150 கிமீட்டர் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் டாட்டா நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
நாட்டின் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப மாற்றங்கள் புகுத்தப்படுவது வழக்கமாகவுள்ளது அந்த வகையில் தேச வளர்ச்சிக்கு மக்களுக்கும் புதிய மாற்றங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
0 Comments