இடைக்கால பட்ஜெட் இனிக்குமா என்றால் இல்லை இது வெறும் டிரெய்லர் என்கிறார் மோடிஜி!

பட்ஜெட் அறிவிப்புகள் தெரிந்து கொள்வோம் அதற்கேற்றார்போல் திட்டமிட்டு  இவ்வாண்டு செயல்படலாம்.  ஆளும் அரசு இடைக்காலப் பட்ஜெட்டாக தாக்கல் செய்துள்ளது.ஆளும் அரசு இம்முறை அறிவித்துள்ள பட்ஜெட் வழக்கம் போலவே உள்ளது. ஆனால் கொஞ்சம் சலுகைகள் ஆங்காங்கே கிடைக்கப்பெற்றுள்ளன.

பட்ஜெட்டில் சூப்பர் ஐட்டமாக தனிநபரின் வருமான வரி விலக்கின் உச்சவரம்பினை 2.50 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

பங்கு சந்தையில் அது குறிப்பிட்ட சந்தையில் உங்கள் பங்குகள் இருக்கா அப்போ நீங்கள் 6-5 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

2.4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகையா  அதற்கு இனிமேல் வருமான வரி இல்லைங்க 

வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸில் டெபாசிட் செய்ரீங்களா  உங்களுக்கான வரி விலக்கு  ரூபாய் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உயர்த்தப்படும். 

சிறு மற்றும் குறு விவசாயிகளா நீங்கள் உங்களுக்கான தொகையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் கிடைக்கும் அதனை அரசு வங்கி கணக்கில் செலுத்திவிடும். 

ஆளும் பாஜக  அரசில் ராணுவத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையினை 3 லட்சம் கோடியாஜ்க அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

வீடு கொள்முதல் செய்தால் ஜிஎஸ்டி வரி குறைப்பு உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைப்பினை சாரால் இயங்கும் தொழிலாளர்களுக்கு மாத பென்சன் தொகை 3000 அதிகரிக்கப்படும். 

விவசாயிகளின் துயர் துடைக்க ஆயுத்தமான அரசு பயிர்கடனுக்கான வட்டித் தொகையை முழுமையாக ரத்து செய்துள்ளது.

மேலே பார்த்த முக்கிய அறிவிப்புகள் சாமனியர்களான நமக்கு உதவிகரமாக இருக்கும் எனறு நம்படுகின்றது. இதனை வைத்து சரியாக 2019 இல் திட்டமிட்டு செயல்பட கணக்கு போட ஆரம்பிசுட்டிங்களா, இல்லை கூட்டி கழிச்சுப் பாரு எல்லாம் சரியா வரும் என்கிறீர்களா,, எல்லாம் சுபம் என்று நம்பி செயல்படுங்கள்.

Post a Comment

0 Comments