எலக்சன் எமர்ஜென்சியில் வாக்காளரின் கடமை முக்கிய பங்கு வகிப்பவை!

தேர்தல் காலம் இது  தேசியம் எங்கும் தேர்தல் தொடர்பாக கட்சிகள் அரசியல் வாதிகள் தங்கள் திறனுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி வருகின்றனர். வாக்காளர்களும் திட்டமிடுவோம் இப்பொழுது ஆராய்வு பணிகளை தொடங்குவோம். தினமும் 10  நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நேரம் ஒதுக்கி சந்தித்து தேடினால் நிச்சயம் கிடைக்கும். 

தேர்தல் காலத்தில் பொதிகை, ஆல் இந்தியா ரேடியோ போன்ற செய்திகளை மட்டும் கேளுங்கள் நம் நாட்டிலுள்ள தனியார் சேனல்கள் கட்சி சார்பு என்பதைவிட வாணிப சார்பாக உள்ளது என்பதை  சிந்தித்து ஓட்டளியுங்கள்.


எலக்சன் எமர்ஜென்சிக் காலத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க தூண்டுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். 

போராட்டங்களை தூண்டி அரசை திசைத் திருப்பும் சில விஷமிகளின் திட்டங்களுக்கு மக்கள் உடந்தையாக இருக்க கூடாது. 

தேர்தல் காலத்தில்  மக்களை திசை திருப்ப ஊடகங்கள் ஒரு சார்பாக செயல்படுவதை மக்கள் உணர்ந்து  நேர்மை உண்மைக்கு மட்டுமே துணை புரிய வேண்டும். 

மக்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்  எந்த கட்சியை சார்ந்தவர் என்பதை விட என்ன படித்திருக்கிறார், என்ன தொழில் செய்கின்றார் அவருடைய தனிப்பட்ட தகுதிகள் என்ன, வழக்குகள் அவர்மீது எவ்வளவு நிலுவையில் உள்ளது. 

 தொகுதியின் தேவையை அவர் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளார் என்பதை வாக்காளர் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

உங்கள் தொகுதி வேட்பாளர்களின் பேச்சு அவர்களின் அனுகுமுறையிலுள்ள நேர்மைத் தன்மையை வாக்காளர்கள் தெரிந்து செயல்பட வேண்டும். 

தேர்தல் காலத்தில் வாக்களர்கள் பொதுபோக்கி வீட்டில் அமர்ந்து விளையாட்டு மற்றும் ஆப்  போன்ற சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிட்டு ஏனோதானோ என மந்தமாக இருந்தால் அடுத்த ஐந்து வருடம் இன்னும் மந்தமாக இருக்கும் மற்றும்  உங்கள் தொகுதியின் எதிர்காலம் எப்படியிருக்கும் என சிந்தித்து செயலாற்றுங்கள். 

தொகுதியை முழுவதுமாக வேட்பாளரும் வாக்காளரும் தெரிந்து  இருக்க வேண்டும். 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் படித்த அதிபுத்திசாலிகள் இதுவரை ஓட்டுப்போடாமல் ஆடியவர்கள் ஓட்டு போட வேண்டும். 

தேர்தல் தேதி தொடங்கியது உங்கள் வேட்பாளரின் செயல்பாடும் அதற்கு முன் அவர் அனுமுறை  மக்களிடம் இருந்தது என தெரிந்து கொள்ளுங்கள். 

காசுக்காக தூசாகி போகாதீர்கள் வாக்களர்களே வார்த்தை ஜாலங்களை நம்பி ஏமாராதீர்கள்

Post a Comment

0 Comments