எலக்சன் எமர்ஜென்சி தொடங்கிவிட்டது சிந்தியுங்க வாக்களர்களே!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் காலம் தொடங்கவுள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில்  இதுவரை நாம் கண்ட தேர்தலுக்கும் இனி காணப்போகும் தேர்தலுக்கும் வேறுபாடுகள் இருக்கும்.  இது புதிரல்ல இந்தியா 2020 வருடம் காலம் வந்து விட்டது நாட்டை வளரவைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.   இந்தியா 2020 அப்துல்கலாம்  அவர்கள்  நமக்குள் விதைத்த விதையாகும். 

தேசியத்தை  வளரச் செய்ய வேண்டும் என பல திட்டங்கள், செயல்பாடுகள், கூட்டங்கள் நடத்துக்கின்றோம். ஆனால்  தேசியத்தின் ஜனநாயகத்தில் இதுவரை இல்லாத இனிமேல் வர வேண்டிய ஒன்று உள்ளது அது வாக்களர் விழிப்புணர்வு. அதற்க்காக சிலேட்குச்சி  தேர்தல் காலத்தை எலெக்சன் எமர்ஜென்சியை தொடர்ந்து பதிவிடவுள்ளது. 

இந்தியாவின் தேர்தல் காலம் ஒரு நெருக்கடி காலம் போல்தான் உள்ளது, வேட்பாளருக்கும், வாக்காளர்க்கும் கெடுபிடிகள் நிறைய ஏற்பட வாய்ப்புண்டு அதனை தாண்டி, எவ்வாறு உங்கள் தொகுதி வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை  தொடர்ந்து பதியவுள்ளோம்.

இப்பதிவுகளில்  வாக்களருக்குரிய  பொறுப்பை உணர்த்தி வாக்குகளை பயன்படுத்தி தேர்தல் வழிமுறைக்கு வலிமை கொடுக்க வேண்டிய விழிப்புணர்வை உங்களுக்கு கொடுக்கவுள்ளோம். 2020 இல் நல்ல அரசுக்கு வாக்காளர்களே காரணம் என்பதை நிருபிக்க வேண்டிய  பொறுப்பு  நம்முடையது. ஆகவே சிந்தித்து செயலாற்றுவோம். 



வாக்களிக்க வேண்டியது நமது கடமை அதுவும் சரியான வாக்காளராக இருக்க வேண்டியது கடமையிலும் பெரிய கடமை  ஆகவே இந்த எலெக்சன் எமர்ஜென்சியை எப்படி சமாளிக்கலாம். என்னென்ன பொதுத் தகுதிகள் உங்கள் வாக்களருக்கு இருக்க வேண்டும். எப்படி பட்டவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குறிப்புகளை விளக்கங்களை கொடுத்து விடுவோம்.  பின் சிந்தித்து செயலாற்ற வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
எலக்சன் எமர்ஜென்சியின் மூலம் மக்களுக்கு ஒரு விசயத்தை தெளிவா உணர வைக்க வேண்டிய நேரம்  வந்துவிட்டது என்பதை சிலேட்குச்சி உணர்ந்துள்ளது. 

மக்களுக்காக சிலேட்குச்சி எலெக்சன்  வரை சில விழிப்புணர்வு அடங்கிய பதிவுகளை கொடுக்கும் மக்களுக்கு ஓட்டின்  முக்கியத் தன்மையும்,  ஓட்டு யாரை நம்பி எங்க போடனும், யாருக்கு போடனும் என்ற கருத்துகளை  கொடுக்கவுள்ளோம்.  பொதுப்படையான  விழிப்புணர்வு கொடுப்போம், தொகுதி வேட்பாளர்களை வைத்து ஆராய்ந்து  முடிவு செய்ய வேண்டியது உங்கள்  பொறுப்பு ஆகும்.

இந்தியாவில் அடுத்தவரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் மாறி மாறி தங்களை  மார்த் தட்டி முன்னுக்கு நிலைநிறுத்தும் இவ்வேளையில்  மக்கள் கொஞ்சம் சித்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. 

காக்கை கூட்டம் போல் மொய்க்க ஆரம்பிக்கும் அரசியல் கட்சிகள் காட்டு மிரண்டித்தனமாக தங்கள் பெருமை பீத்தும்  பெரும்பான்மையான ஊடக  புழுகு மூட்டையின்  முன் விழி பிதுங்கி  நிற்கும் வாக்காளர்களுக்கு  ஏதாவது தெம்பா செய்யனும்னு  யோசிச்சோம், சிலேட்குச்சி உங்களுக்காக விழிப்புணர்வு பதிவை இங்கு கொடுக்கவுள்ளது அதனைப் பார்த்து சிந்தித்து ஆராய்ந்து ஓட்டினை பதிவிடுங்க. 

ஒருமுறை உங்கள் ஓட்டினை பதிகின்றீர்கள் என்பதையும அதற்கான பலன் ஐந்தாண்டு தேவை என்பதை திட்டமிடுங்க. திட்டமிட்டு உங்கள் தொகுதியை ஆராய்ந்து  தொகுதிக்கான தேவை என்ன என்பதையும் அதனால் வீடு அடையும் நன்மையும் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள் வாக்காளர்களே, தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள். 

இந்தியா போன்ற மிகப்பெரிய  ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதனை முறையாக பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். 

எலக்சன் காலத்தில் கிடைக்கும் எந்த ஃபிரி ஊறுகாயுக்கும் ஆசைப்பட்டு வாக்குகளை கொடுக்காதீர்கள்.  உங்கள் தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உங்களின் கையில் உள்ளதை உணர்ந்து ஓட்டு போடுங்கள். 

தேர்தல் காலத்தில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும் எனக்கு என் தம்பிக்கு கிடைக்கும் பலனை பார்த்துதான் ஓட்டுப் போடுவேன் என்று யோசிக்க வேண்டாம். உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் யோசிப்பதோடு உங்களைப் போன்று உங்கள் தொகுதிக்கும் உங்கள் வீட்டு தம்பியைப் போன்று உங்கள் தொகுதியிலுள்ள தம்பிமார்களுக்கும் கிடைக்க வேண்டியதை குறித்து யோசியுங்கள். அதுகுறித்து சிந்தித்து ஐந்து வருடங்களுக்கு பலனளிக்கும் திட்டங்கள் மற்றும் பணிகள் ஏதாவது   திட்டங்கள் கொண்ட  வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். 

 உங்கள் வேட்பாளர் கட்சி, மதம், இனம், மொழி, பழக்க வழக்கம் ஆகியவற்றை கடந்து சிந்திப்பவராக இருக்க வேண்டும். எலெக்சன்  காலம் பொதுவாக மக்களுக்கு எமர்ஜென்சி காலம் போன்றது அது குறித்து ஆராய்ந்து முடிவெடுங்கள். 

நாட்டையும் நாட்டிலுள்ள் 130 கோடி பேரையும் ஆலோசித்து ஓட்டு போடுபவர்கள் மகாமனிதர்கள், அப்படி பார்க்க நேரமில்லியா பரவாயில்லை குறைந்த பட்சம் உங்கள் வீடு உங்கள் சித்தப்பா வீடு மாமா வீடு, மச்சான் வீடு பார்த்து ஓட்டளிக்க முடிவெடுங்கள் ஒவ்வொருவரும் ஆராய்ந்து முடிவெடுத்து ஓட்டும் போடும் பொழுது குறைந்த பட்சம் தகுதியான வேட்பாளர்கள் தென்படுவார்கள் ஓட்டுக்கும் மதிப்பு கிடைக்கும். 

Post a Comment

0 Comments