மெட்ரோ ரயில் கட்டணங்கள் குறைவு மற்றும் சுமார்ட் பைக் சென்னையின் புதுவரவு!

மெட்ரோ ரயில் கட்டணம் குறைத்து அறிவிப்பு சென்னை வாசிகள் வரவேற்பு

சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து 10 ரூபாய் அளவுக்கு குறைத்து அறிவிப்பு வெளியிகி உள்ளது.

சென்னையில் முதலில் 45 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ரயில்கள் தற்போது 35 கி.மீ தூரத்திற்கு வரை இயக்கப்படுகின்றன. இதில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை உள்ள 23 கிலோ மீட்டரும், அதே போல் செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரை உள்ள 22 கிலோ மீட்டர் பயன தூரமும் இதில் அடங்கும். இந்நிலையில் மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், கட்டணத்தை தற்போது குறைத்து, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.



விமான நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் - ரூ.10 நங்கநல்லூர் - ரூ.20 ஆலந்தூர், கிண்டி, சின்னமலை,சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை - ரூ. 40 டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், செண்டரல் - ரூ. 50 உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 60 ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 40 ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் - ரூ.60

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விமானநிலையம் - ரூ.50 மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை - ரூ.40 நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், செண்டரல் - ரூ.40 உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 50 ஈக்காட்டுத்தாங்கல் - ரூ.40 அசோக்நகர் - ரூ.30 அரும்பாக்கம், கோயம்பேடு - ரூ. 10 வடபழனி, திருமங்கலம், அண்ணா நகர் டவர் - ரூ.20 அண்ணாநகர் கிழக்கு - ரூ.30 ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கி மலை - ரூ. 40

எழும்பூரில் இருந்து: விமான நிலையம் - ரூ. 50 மீனம்பாக்கம் - ரூ.60 நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி - ரூ.50 சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் - ரூ.40 ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி - ரூ.30 அரசினர் தோட்டம் - ரூ. 20 செண்ட்ரல் - ரூ. 10 உயர்நீதிமன்றம், மண்ணடி - ரூ.30 ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் - ரூ.50 வட பழனி, அரும்பாக்கம், கோயம்பேடு,திருமங்கலம் -ரூ. 40 அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு - ரூ. 30 ஷெனாய் நகர் - ரூ.20 பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் - ரூ.10 பரங்கி மலை - ரூ.50

சென்ட்ரலில் இருந்து விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் - ரூ.50 கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை - ரூ.40 டி.எம்.எஸ் - ரூ.30 ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி - ரூ.20 அரசினர் தோட்டம்,உயர்நீதிமன்றம்,எழும்பூர் - ரூ. 10 மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ.20 ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 50 கோயம்பேடு பேருந்து நிலையம், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, பரங்கிமலை - ரூ.40 ஷெனாய் நகர் , நேரு பூங்கா - ரூ.20


சுமார்ட் பைக் வாடகை சைக்கிள் திட்டம்:
டிராபிக் சிகன்லில் சிக்குவதை தவிர்க்க் சென்னையில் 40க்கு மேற்பட்ட இடங்களில் சுமார் சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய சைக்கிளில் ஜிபிஎஸ் டிராக்கர் பயன்படுத்தப்படுகின்றது. 

சுமார்ட் பைக் நிறுவனம், சென்னை  நகராட்சி இணைந்து சென்னையில் 26 இடங்களில் சென்னையில் தொடங்கி கல்லுரி, பள்ளி, முக்கிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ஸ்டேசன்கள் ஆகிய இடங்கள் அனைத்திலும் இந்த சுடார்ட் பைக் பறக்கவுள்ளது. 

இந்தசைக்கிள் பயன்படுத்த ஆப் பயன்படுத்தி புக் செய்து  பெறலாம். கூகுள் பிளேவில் சுமார்ட் பைக் ஆப் மூலம்  1 ரூபாய் கொடுத்து தொடங்கி, புக் செய்து கொள்ள வேண்டும். கியூ ஆர் கோடு மூலம் இதனை ஆக்டிவேட்  செய்யலாம்.
பார்க்கிங் நேரத்தில் எளிமையாக பிளாக் செய்து பாதுகாக்கலாம்.  

முறைப்படி இந்த பைகை பெடல் செய்து அருகிலுள்ள இடங்ளுக்கு சென்று வரலாம். சைக்கிளைப் போல் இயங்கலாம். பெங்களூர், மும்பை அடுத்த சென்னயில் புதிதாக பிப்ரவரியில் அறமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உதவிகள் சென்னையில் நெருக்கடி நேரங்களை குறைக்கும் உடலுக்கு ஆரோக்கியமும் நேர மேலாண்மையும் எளிமையாக செய்ய முடியும். 

Post a Comment

0 Comments