எல்லையில் இருந்து என் தம்பிக்கு

பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீரல் இந்திய எல்லையில் ஜம்மு காஷ்மீர் , ராஜௌரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஸ்னைப்பர் தாக்குதலில் ஈட்டுப்பட்டுள்ளனர். இதனால் ராணுவ வீரர் காயமடைந்தார்.

பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்கள்களை  பாகிஸ்தான் எல்லைப் பகுதியில்  இருந்த ராணு வீரர்கள் ஸ்னைப்பர்  நடத்தினார்கள். அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராஜெளரி பூஞ்ச் ஆகிய மாவடட்ங்களில் இந்த ஆண்டு தொடங்கியது முதல் ஒப்பந்ததை நிறுத்தி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த நிலைமை, ஒரு தேசத்தில் இருந்து இரண்டாக பிரிந்தோம். தனியாக வாழ வேண்டுமா வாழு,,,, ஆனால் இப்படி தலை வேண்டும் என்றால் அதெப்படி சாத்தியம் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு என்ன பதில் அரசு தரப்போகின்றது.
அமைதியை விரும்பு தேசம் இது ஆனால் அடித்துக் கொண்டிருப்பதால் பக்கத்து தேசமான உனக்கென்ன பயன் என்று யோசி..

1000 கீ,மி தூரம் பயணித்து வந்து என்தேச எல்லையில் இருக்கும் சகோதரர்களை எண்ணி நாங்கள் விக்கித்துப் போகின்றோம்..

இந்த தேசத்தையும் தேச மக்களை நேசிக்கும் கடைக்கோடி பகுதியில் இருந்து நான் உங்களிடம் வேண்டுவது இதே...

நீங்கள் வீழத்துவது வீரர்களை மட்டுமல்ல, இந்திய விதைகளை அது மீண்டும் மீண்டும் உயிர்தெழும், இந்தமண்ணின் வீர உறவுகளை வருடம் தோறும் உங்களிடம் வாய்தா வாங்கி வாங்கி சகித்து கொண்டிருககும் என் தேசம், சலித்துப் போய்விட்டது உங்கள் மீதான என்நேசம் எத்தனை நாட்கள் வருடங்கள் என அடித்துக் கொண்டிருப்போம்.

எல்லையிருந்து என் தம்பிக்கு!!!!

ஓர் உடலில் ஈருயிராய் பாரதத்தில்

பிறந்தோம்!!!

கங்கையும் சிந்துவும்

கலந்து பெற்றோம்!!!

நபியும்

நாராயணமும்

ஓரிடத்தில் இருந்து

கற்றோம்!!!!

பண்டிகைகளுக்கெல்லாம்

பலகார மாற்றம்

செய்தோம்!...

விடுதலைக்காக

வீர்மாய் இணைந்தோம்

வீழ்ந்தோம் விதைகளாய்!!!!

யார் கண்பட்டதோ

ஈருடல் ஓருயிராய்

ஒன்றுபட்டிருந்ததை

உடைத்துவிட்டோம்!!!

வடமேற்கிலே நீ போனாய்

வாழ்விலிருந்த ஒளிபோனது

எல்லையிருந்தாலும்

எங்களோடு இருக்கின்றாய்

என்றிருந்தோம்!

எவன் விட்ட சாபமோ

எப்போதும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!!!

ஏன் இந்த நிலை

பாருக்கெல்லாம் பரந்தபாரதம்

பாடமாயிருந்த காலம்போயின

பட்டமரமாய் நிற்கிறாள்

நம்மையீன்றத் தாயவள்

நம்மை கூறுபோட்டு

குமுறுகிறாள்!!!!

தனியாயிருந்த நீ

தலையெடுத்து வளர வேண்டாமா!!!

தங்க தம்பி பாகிஸ்தானே

பாரதத்தவனும் நீயும்

உடன் பிறந்தவர்கள்தான்

உலகம் நம்மை

எண்ணி நகைக்க

நாமேனடா நடந்துகொண்டோம்!!!!!

வருடங்கள் எழுபதை

தொட்டுவிட்டன

இன்றுதான் நம்தாய்

நோபலில் ஒன்றாக பங்குகொண்டதை

கண்டு

பரவசமடைந்தாள்!!!!

பாரடா தம்பி

அண்ணன் நான்

இறங்கிவருகின்றேன்

என்றாவது என்தம்பி

எல்லையில்

அண்ணா என

எனைக்காண

வருவானா

என்று

ஏக்கத்துடன்

நான்

கண்ணீரில்

காத்துக்கிடக்கின்றேன்!!

எல்லை

கடந்து வருவாய்

என்றாவது

என்னை

அண்ணா என்று

கட்டிக்கொள்ள!,,,,,,,,,,,,,,,,,

இப்படிக்கு  புதுயுக  பாரதி சோபனா

Post a Comment

0 Comments