ரூபாய் 1 கிலோ அரிசி அஸ்ஸாமில் அடிக்குது இலவச பட்ஜெட்!

அஸ்ஸாம் மாநிலத்திலும் அடிக்குது தமிழக  காத்து, அஸ்ஸாமில் பிப்ரவரி 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏழை பெண்களுக்கு 11.66 கிராம் தங்கம் இலவசம் மற்றும் ரூபாய் அரிசியை 1 கிலோ என சலுகைகளை அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது. 

2019 ஆம்  நிதி ஆண்டிற்கான அஸ்ஸாம் மாநில அரசு தாக்கல் செய்தது. இவ்வாண்டு அஸ்ஸாம் அரசு செய்த  பட்ஜெட்டில் இலவச சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கதாகும். 2019 ஆம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட்டான்து பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது.



மத்திய அரசு வழங்கும் அரிசி கிலோ 3 ரூபாய்க்கு அதனை அஸ்ஸாம் அரசு 1 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. 57 லட்சம் குடும்பங்களுக்கு 1 ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட வேண்டும். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு ரூபாய் 38000 மதிப்பிலான 11.66 கிராம் தங்கம் இலவசமாக கொடுக்கவும் அதனை ஒவ்வொரு வீட்டிலுள்ள 2 மகள்களுக்கும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கணவனை இழந்த பெண்களுக்கு  உதவிததொகையானது ரூபாய் 25000 தொகையும் மாதந்துதோறும் ரூபாய் 250 வீதம் 60 வயது வரை வழங்க நிதிநிலை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ குடும்பங்களுக்கு வருமான உயர்வை 2 லட்சம் வரை உயர்த்தவும், 3 ஆம் வகுப்பு தொடங்கி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் இலவசமாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  சீருடை வழங்கவும் அறிவித்துள்ளது. 

அரசு விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணம் எனப்படும் மெஸ் பில்  ரூபாய் 700 தொகை மானியம் கொடுக்கவும் அரசு அறிவித்துள்ளது. பெண் கல்வியை ஊக்கப்படுத்த  நன்றாக மேல்நிலைக் கல்வி படிக்கும் மாணவிக்களுக்கு  பேட்டரியில் இயங்கும் இரு சக்கர கார் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

மேற்ப்படிப்பு கொடுக்கப்படட் கல்வி கடனில்  ரூபாய் 50,000 தள்ளுபடி செய்யவும் அறிவித்துள்ளது. 

தமிழக இலவச காற்று அஸ்ஸாமையும் விட்டுவைக்கவில்லை ஆனால் இலவசம் வழங்குவதைவிட வாழ்வாதரத்தை முன்னேற்றி உழைத்து படிக்க வைக்கலாம். மாணவர்களை சொந்தமாக படிப்பவர்களாக்கலாம்.

இலவசங்களுக்கு  மக்களை பழக்கப்படுத்து  உழைப்பை குறைக்கச் செய்வதால் என்ன பயன் விழையப் போகின்றது தன்மானம் மறந்து எது இலவசமாக எப்படி வாங்கலாம் எனற சிந்தனை  பெருகும். 

மக்களின் சிந்தனை குறையும்இலவசம்  மக்களின் தேசியவியாதி ஆகும் பொழுது. நாட்டின் பொருளாதார நிலை கேள்விகுறியாகும். சுயசிந்தனை சுடப்பட்டு மண்ணில் புதைக்கப்படும்.

Post a Comment

0 Comments