வருமான வரிதாக்குதலை செய்ய இனிமே ஆதார் அவசியம்- உச்சநீதிமன்றம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பொழுது பான் எண்ணைப் போன்று  ஆதார் எண்ணை இணைத்திருக்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பான் எண் என அழைக்கப்படும்  நிரந்தர கணக்கு எண்ணோடு இணைப்பது தொடர்பான வழக்கினை ஏ.கே சிக்ரி, எஸ். அப்துல் நஸீர் ஆகீயோர் கொண்ட நீதிபதி குழுவால் விசாரிக்கப்பட்டு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.

2018 செப்டம்பர் 26 ஆம்  நாள் உச்ச நீதிமன்றமானது செல்லிடப் பேசி, வங்ககணக்குகள், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார்  கட்டாயமில்லை என அறிவித்தது. 




 டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஸ்ரேயா சரண்,  ஜெயஸ்ரீ சாத்புத் ஆகியோர்  2018 ஆம் ஆண்டு வருமான வரிதாக்குதலை பான் எண் மட்டும் கொண்டு செலுத்தலாம். ஆதார் தேவையில்லை என்று அறிவித்து அனுமதியளித்தது. இதனை எதிர்த்து டெல்லி உச்சம்நீதிமன்றத்தில்  மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

வருமானவரி சட்டத்தின் 139ஏஏ பிரிவினை உறுதி செய்த உச்சநீதிமன்றம் வருமான வரி தாக்குதலுக்கு பான் எண் கட்டாயம் என உத்தரவிட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு வருமான வரி தாக்குதலை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது அவசியமாகின்றது.

Post a Comment

0 Comments