அஞ்சறைபெட்டியில் அழகு குறிப்புகள்!

உங்கள் விட்டு அஞ்சறைப் பெட்டிபோல் உலகில் எந்த ஒரு பெட்டியும் அழகு ஆரோக்கியம்  தருவதில்லை இதனை நாம் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். 

நாம் பயன்படுத்தும் மிளகானது ஆரோக்கியம் நிறைந்து காணப்படும் தினசரி வாழ்வில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவகரமாக இருக்கும். ஆனால் அந்த ஆரோக்கியத்துடன் அழகையும் கொடுக்கும் திறன் கொண்டு பருக்கள் மற்றும் டெட் செல்ஸ்  நீக்கப்படுகின்றது. 

தயிர், 
கரு மிளகு,
மஞ்சள்,
கடலைமாவு போன்ற பொருட்களை வைத்து அழகை மெருகூட்டலாம். 

தயிருடன் மஞ்சள், மிளகு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும் இவ்வாறு கழுவும்பொழுது முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவதற்கு பதில் கடலை மாவு மஞ்சள் வைத்துத் தேய்த்து கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் முகம் பளிச் சென்று இருக்கும். 

கம்பியூட்டர் அதிகம் பயன்படுத்தி கண்கள் சோர்வடைந்து காணப்படும்பொழுது கண்னை  ஒரு குவளை வாட்டரில் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும். குவளை நீரில் ஒவ்வொரு கண்ணையும் ஒத்தி விழி திறந்து வைக்கச் சோர்வு நீங்கிக் கண் புத்துணர்வு பெற உதவிகரமாக இருக்கும். 

இவ்வாறு கண்னை கழுவ கொத்தமல்லியை ஊரவைத்த நீரில் சிறிது ஒத்தி ஜொடுங்கள் கண்எரிச்சல் குணமாகும்.  

மஞ்சளுடன் இணைந்து  மின்ன ஒரு எளிய வழியாக மஞ்சளுடன் தேன் கலந்து 10 நிமிடம் கழித்துக்  கழுவலாம்.


குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சையை பிழிந்துவிட்டு, ஒரு பிடி அல்லது 2 ஸ்பூன் கல் உப்பு கலந்து  குளித்தால் உடலும் மணமும் புத்துணர்ச்சி பெறும் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்கலாம். உடல் மற்றும் மனம் சுத்தியடைந்து உங்களைச் சுற்றி   பாசீட்டிவ் வைப்ஸ் எங்கும் பரவச் செய்யும்.

சீரகத்தை நீரில்  ஊரவைத்து  குடித்தால் அகத்தை சீராக்கி  உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.

மேலும் படிக்க:

எளிய அழகு குறிப்பு அடுக்களை பொருளும் முலதானிமிட்டியும் போதும்!

Post a Comment

0 Comments