மிடில் கிளாஸ் பட்ஜெட் டிரெண்டில் அடி தூள் பட்ஜெட் என அசத்திய்ள்ளது!

பட்ஜெட்டில்  கல்வித்துறையை  மனதில் வைத்து சிறப்பாக செயல்பட வாய்ப்பு வேண்டும் என்பதால் அரசு 94 ஆயிரம் கோடி ரூபாய் கிட்டதட்ட 10 %  கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறைக்கு  ரூபாய் 56,386.63
உயர்க்கல்வித்துறை ரூபாய்  37,461.01 கோடியும். 
ஆராய்ச்சி படிப்புகளுக்கு ரூபாய் 608.87 கோடி தொகைகள் பட்ஜெட்டில்  ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. 

கோடிபேருக்கு பயிற்சி  அளிக்கும் திறன் மேம்ப்பாட்டு பயிற்சி கொடுக்க அரசு அறிவித்துள்ளது.

மிடில்கிளாஸ் மக்களினை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டில்  வருமான வரிவிலக்கு 5 லட்சரூபாய் தனி நபருக்கான வருமான வரிவிலக்காக  கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் 3 கோடிபேர் பயனாளர்களாக  இருப்பார்கள்.



மிடில் கிளாஸ் மக்களை கவனித்த அரசு விவசாயிகள் வாழ்விலும்   கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 12 கோடி விவசாயிகள் பயன் பெற 6000 ரூபாய் நிதியுதவி அளிக்க அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இந்தியாவில் வறுமை, ஊட்டச்சத்து அதிகபடுத்துதல், எழுத்தறிவு எண்ணிக்கை அதிகப்படுத்துதல், சுகாதாரத்தை அதிகப்படுத்துதல் போன்ற திட்டங்களுடன் 2030 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக  உருவாக்கும் 10 அம்ச திட்டத்தை கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளது. 

அரசின் தேவைப்படும் டூல்ஸ் எல்லாம் சிறு குறு, நடுத்தர தொழில் துறையிடம் இருந்து பெற  அறிவித்துள்ளது. 

பட்ஜெட்டில் பல்வேறு புதுமைகளை புகுத்தி டிரெண்டை சூடுபிடிக்கச் செய்துள்ளது அரசு.  நேரடியாக மறைமுறைமாக  80 கோடி  மக்கள் பயன் அடையுமாறு அரசின் பட்ஜெட் உள்ளது என்பது தெளிவாகும். 

பாஜக அரசு  ரயில் கட்டணம் எதையும் உயர்த்தாமல் நல்ல பெயர் எடுத்துள்ளது. மேலும் ரயில்வே பட்ஜெட்டாக 1.58 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரயில் ரோடுகளில் ஆளில்லா பகுதிகள் நீக்கம்.

பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு  செய்த போதிலும் சிறப்பான பணியாக ராணுவ ஊழியர்களுக்கு சிறப்பான சலுகைகள்  வழங்க திட்டமிட்டு செயல்படுகின்றது அதன்படி சம்பள  உயர்வினை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

40 ஆண்டுகால நிராகரிப்பட்ட  ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் நிறைவேற்றி அதற்காக 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

மீன்வளத்துறை அமைத்தல் தொடர்பான அறிவிப்பையும் இடைக்கால பட்ட்ஜெட்டில் இருந்தது.

மேலும் படிக்க:

இடைக்கால பட்ஜெட் இனிக்குமா என்றால் இல்லை இது வெறும் டிரெய்லர் என்கிறார் மோடிஜி!

Post a Comment

0 Comments