டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

போட்டி தேர்வர்களுக்கான மகிழ்ச்சிகரமான அறிவிப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 பதவியானது துணை கலெக்டர், துணை சூப்ரெண்ட் மற்றும் துணை ரெஜிஸ்டர், டிபார்ட்மெண்ட் ஆபிசர் போன்ற காலிப்பணியிடங்களுக்கான நிரப்ப அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப் 1 போட்டித்தேர்வுக்கான மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 139 ஆகும். 

பணியின் பெயர்
துணை ஆட்சியர், சூப்ரெண்ட்
வயது வரம்பு
21-32 வயது வரை
கல்வித் தகுதி
 ஏதாவது ஒரு பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
139
சம்பளம்
ரூபாய் 56,100-1,77,500 வரை பெறலாம்
பணியிடம்
தமிழ்நாடு


மாதச் சம்பளமாக ரூபாய் 56,100 முதல் 1,77,500 தொகை வரைப் பெறலாம். 

கல்வித்தகுதியாக அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 32 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த பிரிவிற்கேற்ப வயது வரம்பில் சலுகையுண்டு. 


முதன்மை மற்றும் முக்கியத் தேர்வு, நேரடித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க புதிதாக எழுதுவோர் ஒன் டைம் பாஸ்வோடு பெற வேண்டும். பதிவு கட்டணமாக ரூபாய் 150 செலுத்தி ஐந்து வருடங்களுக்கு ஒரு செல்லும்  வேண்டும். மேலும் தேர்வு கட்டணம் தனியாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.  மற்ற தேர்வர்கள் தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது ஆகும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 3.1.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 31.1.2019 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு  3.3.2019



மேலும் படிக்க:

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments