பசுமைப்புரட்சியுடன் கூடிய பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 7!

இந்தியாவில் வேளாண்மை
 நம்நாட்டின்  பொருளாதார வாழ்வில்  வேளாண்மை மிக முக்கியப் பங்கு வகிப்பதுடன்  நமது பொருளாதார அமைப்பிற்கு இதுவே முதுகெலும்பாக விளங்குகின்றது.

பொதுப்பங்கீட்டுத் துறை:
உணவுப் பண்டங்களை சீரான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மக்களுக்கு பகிர்வு செய்து வழங்குவதனை பொதுப் பங்கீட்டுமுறை எனப்படும்.

விலைகள்:
வேளாண் பண்டங்கள்  விதைக்கும்  பருவகால தொடக்கத்தில் ஒவ்வொரு பண்டத்திற்கு அரசு குறைந்த அளவு விலையை அறிவிக்கும்.

வேளாண் பண்டங்களின் விலையானது குறைந்த ஆதரவு விலையைவிட குறைவாக இருக்குமானால் அங்காடியின் உபரியாக உள்ள  பொருட்களை வாங்கும்.

கொள்முதல் விலை:
வேளாண்  செலவு மற்றும் விலைகள் குழுவின் பரிந்துரையின்படி அரசினால் இவ்விலை அறிவிக்கப்படுகின்றது.

கோதுமை அரிசியை கொள்முதல் செய்ய  இவ்விலையை பெருவாரியாக அரசு பயனபடுகிறது. குறைந்த அளவு ஆதரவு விலையைவிட கொளமுதல் விலை உயர்வாக இருக்கும்.

மொத்த உள்நாட்டு உறபத்தியின் பங்கு:
விவசாயம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு: இதன்படி பார்த்தால் 13.6% பங்கு கொள்கிறது. 1950- 1951 ஆம் ஆண்டு 55.% ஆக இருந்தது.

நாட்டு வருமானத்தில் விவசாயத்தின் பங்கானது குறைந்து வருகின்றது.. இருப்பினும் விவசாயத்தின் பங்கு இந்திய வருமானத்தில்  பெரும்பங்கை பெறுகிறது.  உற்பத்தி மற்றும் தேவைப் பிரிவில் உயர்ந்து காணப்படுகின்றது.

வேளாண்மை 58% மொத்த பணியாட்களுக்கு வேலைவாய்ப்பு  கொடுகின்றது.

வேளாண்மையே நாட்டின் முன்னணி நிறுவனங்களுக்கு உபரிப் பொருட்களை கொடுக்கின்றது. கைத்தறி, நெசவு, எண்ணெய், அரிசி,  உமி போன்ற பொருட்கள் விவசாயத்தை நம்பியுள்ளன.

சர்வதேச வணிக முக்கியத்துவம்:
இந்தியாவில் வெளிநாட்டுனான வணிகத் தொடர்பு விவசாயத் துறையில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

நாட்டின் மொத்த வெளிநாட்டு உபரிப் பொருட்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் 20 % ஏற்றுமதியாகிறது. விவசாயம் அதன் தொடர்புடைய பொருட்களின் வெளிநாட்டு ஏற்றுமதி 38 % ஆகும்.

மகல்வாரிமுறை- 1822 வில்லியம் பெண்டிங் காலத்தில் கொண்டு வரப்பட்டது
ரயத்வாரிமுறை -1820 சர்தாமஸ் மன்றோ
பூமிதான இயக்கம்-1951 ஆச்சார்யா வினோபாவே
ஜமீன்தார் ஒழிப்பு- 1948-1949  குமாரசாமி ராஜா
தமிழ்நாடு நில உச்ச வரம்பு சட்டம்  1961 30 ஏக்கர்களாக காமராஜர் காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது.
1971- நில உச்சவரம்பு சட்டத்திருத்தின்படி 30 ஏக்கர்களாக இருந்தசட்டம் 15 ஏக்கர்களாக கருணாநிதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

பசுமைப் புரட்சி:
உணவு தானியங்களின் விலை குழு பரிந்துரையின்  அடிப்படையில்  1964 ஆம் ஆண்டு ஆரம்பித்து செயல்பட்டது. பசுமைப் புரட்சியின் காரணமாக 1985 ஆம் ஆண்டு வேளாண் கொள்முதல் விலை நிர்ணய ஆணையம் என்று மாற்றப்பட்டது. 

உணவு தானியங்களின் விலை குழுவில் நிறங்களை கொண்டு மானியக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. அவற்றில்  மஞ்சள் நிறபேழை மானியம்  குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டும் தானியம் வழங்கப்படட்து. 

நீலநிறபேழை மானியம் கடன் மற்றும் மானியத்திற்கான அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. 

பச்சை நிற பேழை மானியம்  விவசாய ஆராய்ச்சியுடன் அதன் மேன்பாட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 

சிவப்பு நிற மானியம் எல்லா வகையான மானியத்திற்கும் எல்லா வகையான மானியத்திற்கும் விவசாய கடனிற்கும் தடை விதிக்கப்பட்டது. 

மேலும் சேமிப்பு கிடங்கு நிறுவனம் 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

சேமிப்பு கிடங்கு நிறுவனம்  2010 இல் மீண்டும் உருவாக்கப்பட்டது. 

1956- 1967 ஆம் ஆண்டு ஆரம்பிக்க பசுமைப் புரட்சியியானது கொடுத்த திட்டத்தின்படி அதிக மகசூல் தரும் விதைகள் கொண்டு விவசாயத்தின் பெருக்கத்தை அதிகப்படுத்தலாம். 

பசுமை  புரட்சி  வார்த்தையை உருவாக்கியவர் வில்லியம் கான்டே
பசுமை புரட்சிக்கான வீரியமிக்க கோதுமை விதைகள் மெக்ஸிக்கோவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ் சுவாமி நாதன் உலக உணவு விருது பெற்ற முதல் இந்தியர் ஆவார். 
உணவு பாதுகாப்பு மசோதா 22.12.2011 கொண்டு வந்தது 12.9.2013 இல் நிறைவேற்றப்பட்டது. 
இ-சௌபால் - விவசாயத்திற்கான கால் செப்டிரி முதன் முதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 
பசுமைப் புரடசியின் காரணமாக இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப புதுமைகள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயக் கழகமானது 1929 ஆம் ஆண்டு  துவங்கப்பட்டது. 

இரண்டாம் பசுமைப் புரட்சி: 
இந்தியாவில் இரண்டாவது பசுமைப் புரட்சியானது 1983 முதல் 1984 வரை உணவு தானிய உறபத்தியின் பெருக்கத்தை வைத்து இரண்டாம் பசுமைப் புரட்சி காலம் என அழைக்கப்பட்டது. 
பசுமை மாறாத புரட்சியினை ஆர்கானிக் விவசயம் என அழைக்கப்படுகின்றது. 

இந்தியாவில்  நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள்  வளங்களின் வளர்ச்சியானது பின்வருமாறு அழைக்கப்படுகின்றது. 

கருமை புரட்சி - பெட்ரோலியம் 
நீலப்புரட்சி- மீன் உற்பத்தி 
அரக்கு புரட்சி தோல்/ கோகோ உற்பத்தி
தங்க இழை  புரட்சி/ தோட்டக்கலை/ தேன் உற்பத்தி 
பசுமை  புரட்சி- விவசாயம் 
சாம்பல் புரட்சி- உரம் உற்பத்தி 
பிங் புரட்சி - வெங்காயம்/ இறால் உற்பத்தி 
வெள்ளி புரட்சி/ முட்டை / கோழிப்பண்ணை
வெண்மைப்  புரட்சி/ பால் பண்ணை
மஞ்சள் புரட்சி/ எண்ணெய் வித்துக்கள் 
பசுமை மாறா புரட்சி ஆர்கானி  புரட்சி/ சுற்றுசூழல் பாதுகாக்கும் உற்பத்தியை அதிகரித்தல் 
சிகப்பு புரட்சி/ கறி, தக்காளி உற்பத்தி

Post a Comment

0 Comments