இந்திய பொருளாதாரமும் அதன் அடிப்படை ஹைலைட்ஸ் பகுதி 3!

இந்தியாவின்  பொருளாதாரம் பின்தங்கிய பொருளாதாரம் என்ற இந்த நிலையிலிருந்து வளர்கின்றபொருளாதாரம் வரை உயர்ந்துள்ளது.

வேளாண்மை:
இந்தியாவில் 66 சதவீத மக்கள் வேளாண்மையை தொழில் நம்பி உள்ளனர் ஆனால் அவற்றின் வருமானமும் 14 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 சதவீதம் மக்கள் மட்டுமே வேளாண்மை சார்ந்துள்ளனர்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் கடந்து வர வேண்டி இருக்கின்றது. நாட்டில் உற்பத்தி முறைகளிலும் அவற்றில் பயன்படுத்தப்படும் கருவிகளும் பழமையானதாக உள்ளது. ஆதலால் சிறு தொழிலில் ஈடுபடுபவர்கள் அதுக்கு வருமானம் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் அவர்களிடம் மூலதனம் குறைவாக இருப்பதால் அளவில் தொழில்களை விரிவுபடுத்த முடியவில்லை. 


நமது நாட்டு மக்களில் பெரும்பாலானோர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கை தரமும் கூட அடிப்படைத் தேவைகளும் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இறப்பு விகிதமும். அதிகமாக உள்ளது.

இந்தியப் பொருளாதார பின்தங்கிய வளர்ச்சி மற்றும் வேலையில்லாத திண்டாட்டம், முழு நேரம் வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தமட்டில் வேலைவாய்ப்பு அமைப்பது என்பது சவாலாக உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வியாபார நிலை இருக்கின்றது. மேலும் அதிகரித்து வரும் வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதி உழைக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. இது நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி பாதிக்கச் செய்யும்.

மக்களின் செல்வம் பகுதிகளிலும் வருவாயிலும் சமனற்றநிலையை சரி செய்யப்பட வேண்டும். வருவாய் ஏற்றத்தாழ்வினை சரி செய்யும் போது சரிசமமான வாய்ப்பு வரும்.

இந்தியாவில் கற்றோர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான போக்குவரத்து, செய்தித் தொடர்பு, வங்கிகள் கல்வி மருத்துவ வசதி கொஞ்சம் கட்டுமானங்களை அதிகப்படுத்தவும் தரமானதாகவும் உருவாக்க வேண்டும்.

ஆக்கபூர்வ மாற்றங்கள்:
வேளாண்மையின் சாகுபடி முறையில் இந்தியா பல்வேறு மாற்றங்களை கொடுத்து வருகின்றது. கிராமங்களுக்கு மின்சாரம் விரிவடைந்து நீர்ப்பாசனமும் பெருகி வருகின்றது. தரமான விதைகள் மற்றும் உரங்கள் அரசு மூலம் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன.

ஐந்தாண்டு திட்டங்களின் மூலம்  தொழில் துறை வளர்ந்து வருகின்றது. 1991 புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் பல புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் அறிமுகமாகின்றன.

நாட்டின் மொத்த வருமானம் இந்தியரின் சராசரி வருமானமும் இரண்டும் கூடியிருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் சேவைத்துறை அபரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தில் 50% முதல் 60% வரை உள்ளது.

இந்தியாவின் முதல் பொருளாதார திட்டம் என்பது 1934 இல் பொறியாளர் சர். எம். விஸ்வேஸ்வரய்யாவால் இந்தியாவின் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் இந்த நூலின் மூலம் பட்டது.

1938 தேசிய திட்டக் குழு இந்திய தேசிய காங்கிரசால் தலைமையினால் துவங்கப்பட்டது.
1944 பம்பாயில் 8 முன்னணி தொழிலதிபர்களால் பம்பாய் திட்டம் வழங்கப்பட்டது.
1944 இல் எஸ்.என் அகர்வாலால் காந்திய திட்டம் வழங்கப்பட்டது.
1945 இல் எம்.பி.ராயினால் மக்களினுடைய திட்டம் வழங்கப்பட்டது.
1950 இல் ஜே.பி நாராயணனால் சர்வோதய திட்டம்ம் உருவாக்கப்பட்டு அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மத்திய திட்டம்:
இந்தியாவின் சமத்துவ பொருளாதாரத்தில் மைய திட்டமிடல் இருந்தது இதனை ஆணையத்திடம் எனவும் கட்டளை திட்டம் எனவும் வழங்கப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருளாதார உற்பத்தியின் அளவு தேசிய வருமானம் ஆகும்.

தூண்டும் திட்டம்:
கலப்புப் பொருளாதாரம் நமது நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் துறையும் இணைந்து  செயல்படுவதை குறிக்கின்றது. அரசாங்கம் தனியார் தொழில் துறைகளின் நோக்கங்களை நிறைவேற்ற சில வரிச்சலுகைகள் மற்றும் ஊக்கங்கள் கொடுத்து தனியார் துறையை வளரவிட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை கொண்ட ஐந்தாண்டு திட்டங்கள் போல இல்லாமல் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு அடுத்து வரும் ஆண்டையும் திட்டத்துடன் இணைக்க வேண்டும.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments