வானம் பொலிகின்றது பூமி விளைகின்றது உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி, வட்டி, கிஸ்தி எங்களோடு வயலுக்கு வந்தாய நாட்டு நட்டாய என்ற வசனம் கேட்டு வளர்ந்தவர்கள் நாம், ஆனால் இன்று தமிழ்நாட்டின் டெல்டா பகுதியிலோ வானம் பொழிந்து காற்று கஜாவாகி அனைத்தையும் காலி செய்துவிட்டது. வருடா வருடம் பொங்கலோ பொங்கல் என நம்மை கூவச் செய்யும் விவசாயிகள் இன்று ஒதுங்க சிறு குடிசை கூட இல்லாமல் கஜா புயலால் வீடு, வாசல் போன்ற அத்தியாவசியத் தேவையை இழந்து தவிக்கின்றனர்.
பொங்கல் பரிசு 1000 :
பொங்கல் பரிசு ருபாய் ஆயிரமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய நிலையில் பொங்கல் பரிசு ஆயிரம் தொகை நகரங்களில் வாழும் நம்மைவிட கஜாபுயலால் பாதிப்படைந்தோரின் தேவையை நிறைவு செய்வது முதல் முக்கிய கடமையாகும். அரசுதான் ரேசன் கார்டு கொண்டோர்க்கு ரூபாய் 1000 என அறிவித்தது என்றால் சுயத்தோடு வாழும் நமக்காவது நெஞ்சில் சுருக்கென்று இருக்க வேண்டுமா!,
தேவைதானா ஆயிரம்:
கஜா புயலால் வாழ்வாதரங்களை இழந்து தவிக்கும் டெல்டா விவசாயிகளின் நிலையை நினைத்துப் பாருங்கள் நமக்கு தேவைதானா இந்த ஆயிரம், எதை இழந்தோம் என்ன கொடுக்க போகின்றோம், வருடா வருடம் நெல் அறுவடை செய்யும் நமது டெல்டா விவசாயிகள், பொங்கல் சோறு வைக்க நமக்காக சேற்றில் நின்ற விவசாயிகள் சொல்லா முடியா இழப்பில் தவிக்கின்றனர்.
ரேசன் கார்டு உள்ளோர் நமது அனைவருக்கும் அடிப்படை வசதியாவது இன்றைய நிலையில் இருக்கும். ஆனால் டெல்டா விவசாயிகள் அதனையும் இழந்து தவிக்கின்றனர். இதனை நாம் உணர்ந்து செயல்படுவோம்.
பொதுமக்களே! நாம் உழைத்து கொடுக்கத்தான் முடியவில்லை. வீட்டுத்தேவையுள்ளது மற்றும் இயலாமை காரணமாக கூறலாம். ஆனால் இயன்றோர் அரசின் பொங்கல் பரிசு ஆயிரத்தை கஜாவில் பாதிக்கப்பட்டோர்க்கு வழங்கலாம்.
இன்றைய நிலையில் சரிதவறு என வாதிடுவதையும், கூட்டம் போட்டு கூப்பாட்டு போடுவதை நிறுத்தி சிந்தித்துச் செயல்படுவோம். எப்படியும் நம்மில் லட்சக்கணக்கானோர் ரேசன் கார்டு வைத்திருப்போம், நாம் அனைவரும் ஒன்றினைந்து லட்சக்கணக்கான ஆயிரங்களை கொடுத்தால் டெல்டா விவசாயிகளாவது வாழ வழி கிடைக்கும்.
சோறுப் போட்ட நமது விவசாயிகளின் சொல்லெனா துயரைப் போக்குவோம். சுயமாகச் சிந்தியுங்கள் நம்மை போன்றே அவர்களும் இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாடக்கூடியவர்களே என்பதை மனதில் சிந்தித்து மனப்பூர்வமாக கொடுப்போம்.
பள்ளி கல்லுரி மாணவர்களே, தினமும் நீங்கள் வாங்கும் பாக்கெட் மணியை பரிசாக கொடுக்கச் சொல்லவில்லை, உங்கள் வீட்டில் புதிதாக கிடைக்கும் தொகையை பொங்கல் தொகையை டெல்டா விவசாயிகளுக்கு பரிசாக கொடுக்கச் சொல்லுங்கள் பண்போடு செயல்படுவோம். நாளைய பாரதம் காக்க இன்று இணைந்து செயல்படுவோம். ஜல்லிக்கட்டினை காத்த இளங்காளைகளே டெல்டா மக்களின் இன்றைய போராட்ட நிலையையும் காக்க வேண்டியது கடமையாகும்.
அரசையும் அவர்களையும் இவர்களையும் குறை கூறி பெயர் வாங்கி பழக்கப்பட்ட நமக்கு சுய சிந்தனை இருக்கின்றது அது நிச்சயம் பணிசெய்யும் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் உங்களில் ஒருவள் நான்.
0 Comments