போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் தொகுப்பினை தொடர்ந்து படியுங்கள் தேர்வுக்கு பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.
தேசிய நிறுவனங்கள் சட்டத்தீர்ப்பாயத்தின் உதவியால் வங்கிகளில் 80 ஆயிரம் கோடி வாராக்கடன் மீட்டுள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திவால் சட்டம் அமல்படுத்தபட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தேசிய தீர்ப்பாயச் சட்டத்தின்ப்படி 80 ஆயிரம் கோடி வங்கிகள் மீட்டுள்ளன. இதுவரை 1322 வழக்குகள் சந்தித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனைகளில் வாங்கப்படும் மருந்துகளுக்கு தனித்துவ பார்க்கோடு அச்சிட திட்டமிட்டு வருகின்றது.
முதலீட்டுச் சந்தையில் சிறப்பான செயல்பாட்டினை அடுத்து இந்தியா உலக அளவில் பிரிட்டனை முந்தி நான்காவது இடம் பிடித்துள்ளது.
நெத்தர்லாந்து நாட்டில் நடைபெறும் டாட்டா ஸ்டீல் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வானத் ஆனந்த் ஆபார வெற்றி பெற்றார்.
காவிரி- கோதாவரி இணைத்து தென் மாநிலத்தை வளப்படுத்தி நீர் சிக்கலை போக்க மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டம்.
இந்திய ரூபாய்த் தாள்களை நேபாளத்தில் பயன்படுத்த தடை
உலக ஸ்டெரென்த் லிப்டிங்க் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 வீரர்கள் தங்கம் வென்று சாதித்துள்ளனர். உலக லிப்டிங் போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
இந்திய அளவில் ரயில்களை தூய்மையாக வைத்து சிறப்பான பணியாற்றி தெற்கு ரயில்வே முதலிடம் பெற்றுள்ளது.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் ழ்ங்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு குடிப்போதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்தை தடுக்கவும் மற்ற மாநில உரிமம் பெறுவதையும் தடுத்து நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அகமாதாபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் முதலாக நூலகம் தொடங்கி மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து செயப்பட்டுள்ளது.
தலைசிறந்த ஊடகவியலாளர் விருதினை தமிழகத்தைச் சேர்ந்த நியூஸ் 18 ஆசிரியர் குணசேகர் பெற்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ராம்நாத் கோயாங்கா விருது பெறுவது முதல் முறையாகும்.
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சணை வீராங்கனை 16வது மும்பை மாராத்தான் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டிலேயே முதன் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன மார்பக புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு.
தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் 100 நாட்களில் 7 லட்சம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். செப்டம்பர் 23, 2018 ஆம் நாள் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பிடங்களாவன
மகாராஷ்டிரா, நாக்ப்பூர் -ஓல்ட் ஐகோர்ட்
ஆக்ரா- ஆஹா கான் பேலஸ்
ஆக்ரா- ஹாதி கான் பேலஸ்
ராஜஸ்தான், அல்வார் மாவட்டம்- நிம்ரான் போரி
ஒடிஷா - ராணிப்பூர் ஜைரைல்
உத்தர்காண்ட்- விஷ்ணு டெம்பிள்
ஹௌகாத்தி ஐஐடி அறிவியலாளர்கள் பாலின் தூய்மை தன்மையை கண்டறிய பேப்ர்கிட் கண்டறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருகிவரும் தனியார் ஊடகத்தின் ஆதிக்கத்தின் காரணமாக 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரோடியோ பயிற்சி மையங்கள் மூட அறிவித்துள்ளது. இந்திய மாநிலங்களான தெலுங்கானா, ஹைதிராபாத், உத்திரபிரதேசத்தின் லக்னோ, கேரளாவின் திருவானந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள பயிற்சி நிலையங்கள் முடப்படவுள்ளது.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தை பருவத்தின் முதல் காலாண்டில் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மாநிலங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்தை நெறிப்படுத்து இ-வே பில் முறை தமிழ்நாட்டில் ஜூன் 2, 2018 முதல் செயல்பட்டு வருகின்றது.
104 கட்டணமில்லா தொடர்பு எண் சேவையின் மூலம் ரத்தம், உடல், ரத்தம் உடல், உறுப்பு, கண்தானம் 104 எண்ணை அழைத்து பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 557வது மலர் காட்சி நடைபெற்ற நாள் 19. 5. 2018 ஆகும்.
சூரிய சக்தியில் இயங்கும் கழிவறைகள் பெற்றுள்ள முதல் வடகிழக்கு மாநிலம் எனும் பெருமையை மணிப்பூர் மாநிலம் பெற்றுள்ளது.
பள்ளிக்கல்விக்கான சம்காரா சிக்ஷா திட்டத்தை மனித வளத்துறை அமைச்சகம் டெல்லியில் துவக்கியது
13-வது மாநிலங்களுக்கிடையேயான குழுவின் நிலைக்குழுவின் கூடுகை மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் 25 மே, 2018 அன்று புதிய தில்லியில் நடைபெற்றது.
சௌக்கியம் என்ற பெயரிலான மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய நாப்கின்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதா அமிர்தானந்தம்யி மடம் கிராம திட்டம் சார்பில் இந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நாப்கின்கள் ஒரு வருடம் முழுதும் துவைத்துப் பயன்படுத்த முடியும். வாழை மட்டை நார்களைக் கொண்டு துணி மூலம் இந்த நாப்கின்கள் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும்.
மேலும் படிக்க:
0 Comments