தமிழ் இலக்கணம் குறித்து ஹைலைட்ஸ் பகுதி 7!

போலி :
ஒரு சொல்லில் முதலில் உள்ள எழுத்தோ, இடையில் உள்ள எழுத்தோ கடையில் உள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறுபடாமல் இருந்தால் போலி எனப்படும். 

முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும். 
எ.கா: மஞ்சு, மைஞ்சு, மயல், மையல்

இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது இடைப்போலி எனப்படும்

எ.கா: முரசு- முரைசு, அரசியல் - அரைசியல், அரசு- அரைசு

ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது கடைப்போலி எனப்படும். 

எ.கா: அறம் - அறன், பந்தல்- பந்தர், அகம்- அகன், கலம்- கலன் 

சொல்லில் உள்ள அனைத்து எழுத்துக்களும் மாறுபட்டாலும் பொருள் மாறுபடாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்.

எ.கா: ஐந்து- அஞ்சு

வழக்கு:
நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கிவந்தோர்களோ அதை வழங்கி வருவது ஆகும். 

வழக்கு 2 வகை
இயல்பு வழக்கு : 3 வகை
1 இலக்கணமுடையது
2 இலக்கணப் போலி
3 மருஉ

தகுதி வழக்கு 3. வகை
1 இடக்கரடக்கல்
2மங்கலம்
3.குழுஉக்குறி

இயல்பு வழக்கு: 
1. இலக்கணமுடையது:- இலக்கணப் பிழை இல்லாமல் சொற்களை வழங்கி வருவது
எ.கா: யாழினி பாடம் படித்தாள் 
              மாடு வந்தது

 2. இலக்கணப்போலி : நம்முன்னோர்கள் இலக்கணமுடையது போல் வழங்கி வரும் சொற்கள் 
எ.கா: புறநகர், வாயக்கால், நுனிக்கொம்பு

இலக்கணமுடையது
நகர்ப்புறம்
கால்வாய்
நுனிக்கொம்பு

இலக்கணப்போலி
புறநகர்
வாயக்கால் 
கொம்புநுனி




3. மரூஉ: 
மருகி வருதல் அல்லது சிதைந்து வருதலை மரூ என்பர் எ.கா
தஞ்சாவூர் என்பதை தஞ்சை
கோயம்ப்புத்தூர் என்பதை கோவை
திருச்சிராப்பள்ளி என்பதை திருச்சி

தகுதிவழக்கு:
இடக்கரடக்ககல்= பலர் முன்னே கூற இடையூராக இருக்கும் சொற்களை 

நிக்கித் தகுந்த சொற்களால் வழங்குவது.

எ.கா: வாய்கழுவி வந்தேன் என்பதை வாய்ப்பூசி வந்தேன் எனக் கூறுவது

மங்கலம்:
அம்ங்கலமான சொற்களை நீக்கி மங்கலமான சொல்லால் வழங்குவது 

எ.கா: பொற்கொல்லன் பொன்னைப்பற்றி எனக் கூறுவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த  ஒன்றாகும்.

தொகைநிலைத் தொடர்கள்: 
தொகை 6 வகைப்படும்:
சொற்கள் தொடராகும் போது, இரு சொற்களுக்கு  இடையே வேற்றுமை,  வினை உவமை முதலியவற்றுள் ஒன்று மறைந்து வரும், இவ்வறு உருபுகள் மறைந்து வரும்  தொடர்களை தொகைநிலைத் தொடர்கள் என்பர் 

வேற்றுமைத்தொகை: 
இரு சொற்களுக்கு  இடையில் வேற்றுமை உருபு மறைந்து வருவாயின் 

அது  வேற்றுமைத் தொகையாகும். வேற்றுமை எட்டு வகைப்படும் என்பதை முன்பே  பார்த்தோம். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமை  உருபு இல்லை.

எ.கா:
பால்  பருகினான் => 'பாலைப்  பருகினான்' ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை 
 உருபுமறைந்து  வந்துள்ளதால், இரண்டாம் வேற்றுமைத் தொகை.

2. தலை வணங்கினான்=> மூன்றாம் வேற்றுமைத் தொகை ('ஆல்'  மறைந்து வந்துள்ளது)

3. வேலன் மகள்=> நான்காம்  வேற்றுமைத் தொகை  (கு என்னும்  4-ஆம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)

4. ஊர்நீங்கினான் 5-ம் வேற்றுமை தொகை  (ஊர்+இன்+நீங்கினான் - 5-ம் வேற்றுமை உருபு 'இன்' மறைந்து வந்துள்ளது)

5. செங்குட்டுவன் சட்டை=> 6-ம் வேற்றுமைத் தொகை (அது என்னும் 6-ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)

6. குகைப்புலி=> வேற்றுமைத் தொகை (குகை+கண்+புலி)   ( கண் எனும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)

வினைத்தொகை: 
மூன்று காலத்தையும்  காட்டும்  இடைநிலைகளும் பெயரெச்ச விகுதயும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை  ஆகும். 

காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
உண்கலம் 
உண்டகலம் - இறந்த காலம் 
உண்ணுகின்ற கலம்- நிகழ்காலம்
உண்ணும் கலம்- எதிர்காலம் 
இதேபோல், ஊறுகாய், செய்தொழில், ஆடுக்கொடி, பாயும்புலி, அடைகக்கடல், 

வருவண்டி போன்றவையும் வினைத்தொகைகளே ஆகும். 

பண்புத்தொகை: 
சொற்களில் 'ஆன்' என்னும் பண்புருவும் 'மை' விகுதியும் தொக்கி  மறைந்து வருவது. 

வெண்ணிலவு - வெண்மை ஆன நிலவு
சதுரக்கல்- சதுரமான கல் 
இன்சுவை- இனிமையான சுவை

நிறம், மணம், குணம், வடிவம், ஆகியவற்றைச் சார்ந்த பண்பு பெறப்படும்

 குறிப்பு = ஒரு சிறப்பு பெயருக்கும், பொதுப் பருக்கும் இடையில் ஆகிய என்னும் பண்புரு மறைந்து வந்தால் அது இருபெயரிட்டுப் பண்புத்தொகை ஆகும். 

எ.கா: 
மல்லிகைப் பூ
மல்லிகை - சிறப்பு பெயர்
பூ - பொதுப் பெயர் 

உம்மைத்  தொகை: 
சொல்லின் இடையிலும், இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தந்தால் அது உம்மைத் தொகை ஆகும். 

கபிலபரணர்- கபிலரும் பரணரும்
தாய்தந்தை - தாயும் தந்தையும்
உற்றார் உறவினர் - உற்றாரும்  உறவினரும் 

உவமைத்  தொகை: 
சொற்களுக்கு இடையில் போல என்ற உவமை, உருபுகள் மறைந்து வருவது 
எ.கா: கயல்விழி- கயல் போன்ற விழி

அன்மொழித் தொகை: 
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொரபுகளுக்கு புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள்  தருவது  அன்மொழித்தொகை  ஆகும். 

எ.கா: 
தொகாநிலைத் தொடர்:
தொகா நிலைத்  தொடர் 9 வகைப்படும்

ஒரு தொடரில் இரு சொற்களுக்கு  இடையில் சொல்லோ, உருபோ மறையாது வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் ஆகும். 

 தொகை=> மறைந்து வருதல் ஆகும்
தொகா=> மறையாது வெளிப்படையாக வருதல் 

1. எழுவாய்த் தொடர் -கபிலன்  வந்தான் 
2. விளித்தொடர்- கதிராவா! வா
வினைமுற்றுத் தொடர்- கண்டேன் சீதையை 
பெயரெச்ச தொடர் - விழுந்த மரம்
வினையெச்ச தொடர்- வந்து  போனான்
வேற்றுமை தொகைநிலைத் தொடர்- வீட்டைக் கட்டினான்
இடைச்சொல் தொடர் - மற்றொன்று 
உரிற்சொற்றொடர்- மாமுனிவர்
அடுக்குத் தொடர்- வாழ்க வாழ்க வாழ்க

முற்று ஈரெச்ச எழுவாய் விளிப்பொருள் 
ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநில

மேலும் படிக்க:

தமிழ் இலக்கண ஹைலைட்ஸ் பகுதி 6!

Post a Comment

0 Comments