மத்திய அரசின் மகிளா கிஷான் விருது பெரும் தமிழக பெண் விவசாயி அழகு!

தமிழக பெண் விவசாயிக்கு மகிளா கிஷான் விருதினை இந்திய அரசு அறிவித்து  கௌரவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பையைச் சேர்ந்தவர் அழகு என்ற பெண்மணி இவர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆயில்  எஞ்சின் வாங்க 6 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூரில் வேளாண்மை துறை அதிகாரிகளை தன் கணவருடன் சந்தித்தார்.

பெண் விவசாயி அழகுக்கு அன்று முதல் விவசாயத்தில் புதியபாதை கிடைத்தது. வேளாண் துறை அதிகாரிகளின் ஊக்குவிப்பால் புதிய வகை  பயிரிட்டார். தர்பூசணி போன்றவை மூலம் லாபமும் பெற்றார்.
 


அவற்றில் நல்ல வருமானம் பார்த்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி, ஆடு மாடு வளர்ப்பு குறித்து பயிற்சியில் ஈடுபட்டார். கோழி, பசுஞ்சாணம், எரு பயன்படுத்தி சிறு அளவில் விவசாயத்தை தொடங்கினார். பின் 10 ஏக்கர் பரப்பிற்கு  விரிவுப்படுத்தினார்.
 
வேளாண் அறிவியல் நிலையத்தின் சோதனைக்காக பல பயிர் ரகங்களை பயிரிட்டு வெற்றியும் பெற்றார். பாலூர் ரக சிறுகீரை, கோ 5 வெங்காயம், சம்பங்கி பயிரிட்டார் அவற்றில் நல்ல மகசூலும் பெற்றார்.
வீட்டுச் செலவுக்காக விவசாயம் செய்து வந்த அழகு விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பிலும் இறங்கினார்.

முதலில் கறவை மாடுகள் வாங்கி பால் கறந்து தனியார் மூலம் ஆவினுக்கு அனுப்பினார். அதன்பின் 60க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தினார் அழகு. காலையிலும் மாலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட லிட்டர் பாலை ஆவின் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

நாட்டுக்கோழி பண்ணை வைத்து கடக்நாத் என்னும் கருங்கோழிகள் வளர்த்து  கிலோ 450க்கு விற்பனை செய்தார், அவற்றின் முட்டைகளை ரூபாய் 10 ரூபாய்க்கு விற்றார். மேலும் பூச்சி விரட்டி, தயாரித்து உரச் செலவினை சேமிப்புச் செய்தார்.
அழகு என்ற தமிழ் பெண்ணின் அயராத உழைப்புக்கு மதிப்பளித்து மத்திய அரசு மகிளா கிஷான் விருது  அறிவித்துள்ளது வரும் 5-ஆம் தேதி டெல்லி பெண் விவசாயி அழகு மகிளா கிஷான் விருதினைப் பெற்றுக் கொள்கிறார்.
 
தமிழக விவசாய பெண் விருதினைப் பெறுவதன் மூலம் தமிழகத்திற்கு பெருமையான தருணமாக கருதப்படுகிறது. இதன்மூலம் அழகு போன்ற பல்வேறு விவசாயிகள் விவசாயத்தில் லாபம் கிடைக்க முன்வருவார்கள் என்று நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments