மக்களால் நான், மக்களுக்காகவே நான்; என்று வாழ்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம்!

செல்வி ஜெ.ஜெயலலிதா எனும் நான்,,, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற கர்ஜனை 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் ஆட்சி செய்துள்ளது. இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கும் சிங்க கர்ஜனையின் எதிரொலிக்கு  சொந்தக்காரர்  முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆவார்.

ஜெயலலிதா என்ற சொல் தமிழக அரசியலில் என்றும் நிறைந்திருக்கும் கர்ஜனை ஆகும்.
பால் போன்ற முகம் பட்டென்று பதில் தரும் குணம், தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்ட  ஒரு பெண் அரசியல்வாதி ஒருவர் உண்டு என்றால் அவர் செல்வி ஜெ.ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும். 
தமிழக மக்கள் அனைவராலும் ஒற்றுமையுடன் அம்மா என்று அழைக்கப்பட்டவர். 


14 ஆண்டுகள் கிட்டத்தட்ட 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் சந்தித்த சவால்களையும், அரசியல் வாழ்க்கையினையும் வெற்றியுடன் ஆண்டு மறைந்த தினம் இன்று, நம் மனதை இன்னும் ஆண்டு கொண்டிருக்கும் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுத் தினம். 

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாகச் சாதித்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், சினிமாவிலும் சிறப்பிடம் பெற்று 100 படங்களுக்கு மேல்  நடித்தவர், அரசியலில்  எம்ஜிஆர் வாரிசாக நின்று சாதித்துக் காட்டியவர் செல்வி ஜெ.ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த நாள் முதல் முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ராஜ்யசபாவில் உறுப்பினராகவும் சிறந்த செயலாற்றினார்.

எம்ஜிஆரின் மரணத்திற்குப் பின்பு ஜெயலலிதா அதிமுகவின் அடுத்த எதிர் காலமானார்.1991 ஆம் ஆண்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்று இளம் பெண் முதல்வராகத் தேர்வானார் அன்று முதல் 2016 வரை அவர் ஆறுமுறை முதலமைச்சராகப் பணியாற்றியபோது அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களிடையேப் பாராட்டைக் கொண்டுவந்தன. அவரது பொதுக்கூட்டப் பேச்சுக்கள் எதிரணியினரை எதிர்த்துப் பேச முடியாமல் வாயடைக்க வைத்தது.

சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தி6ல்2016 செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பு நாள்வரை முதலமைச்சராகச் செயல்பட்டு வந்தது ஜெயலலிதா அவர்கள் சிறப்பான நிர்வாகத்தையும் கட்டுக்கோப்பான அரசியலையும் தந்து மக்களைத் தன்பால் ஈர்த்தவர் தன்னிகரற்றவர், மெரினாவில் இரண்டு வருடமாகத் துயில் உறங்கும் தமிழகத்தின் தலைசிறந்த அரசியல்வாதியான பெண் என்பதை உலகிற்கு நிரூபித்து இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்தவர் என்ற பெருமையுடன் என்றும் அவர் நினைவுடன் வாழும் தமிழக மக்களாகிய நாம், என்றும் நம்முள் நீக்கமற நிறைந்தவர் அம்மாதான்.

தமிழக அரசியலில் அம்மாவின்  வெற்றிடம் என்றும் அது தனியிடமாகவே இருக்கும். அவரால் கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட தமிழக அரசியல்  களங்கள் என்றும் நீங்காத நினைவாகவே நம்மிடையே இருக்கும்.  

 மேலும் படிக்க:

Puratchi Thalaivi Jayalalitha - Lioness of Tamilnadu politics

Post a Comment

0 Comments