எய்ட்ஸ் இல்லா பாரதம் அமைப்போம்!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதிலும் கூன் குருடுச் செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று தமிழ் மூதாட்டி அவ்வைப் பிராட்டி கூறினார்.

ஆனால் இன்று மனிதக்குலம் நாகரீகம் என்ற போர்வையில் தன்னைத்தானே சீரழித்து வாழ்வையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

மனிதனுடைய உயிரைக் குடிக்கும் கொடிய நோய்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்றாகும்.

இந்த நோய் முதன் முதலில் 1981-களில் மேற்கத்திய நாடுகளில் பரவியது அந்தக் காலகட்டங்களில் பாலியல் உறவுகள் என்பது சுதந்திரமாகவும்கவனிக்கப்படாத நிலையிலும் இருந்தது. இதன் காரணமாகத் தாக்கம் அதிகரித்தது.

இந்தியாவிலே 1985 ஆம் ஆண்டுகளில் கொடிய இந்தக் கொடிய வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு இருக்கவில்லை.

1985 ஆம் ஆண்டுச் சென்னையின் மருத்துவத்துறையில் நிர்மலா என்ற மாணவிக்கு எச்ஐவி ஆய்வு குறித்துக் கண்டறியுமாறு தெரிவிக்கப்பட்டது. 



எச்ஐவி எய்ட்ஸ் என்றால் என்று தெரியாததால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதைப் போல உணர்ந்த மாணவி நிர்மலா, தனது ஆய்வைத் தொடங்கிமும்பையில் பாலியல் அப்பகுதிகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தி அவற்றில் எந்த அறிகுறிகளும் இல்லை என்பதைக் கண்டறிந்துத் தனது ஆய்வை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டார். ஆனால் துறைத்தலைவர் ஊக்கத்தோடு தனது ஆய்வை மேலும் தொடர்ந்தார்.

மும்பையைப் போல் சென்னையில் பாலியல் தொழிலாளர்களுக்கு எனத் தனி இடம் கிடையாது. சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் இடையேமூன்று மாதம் ஆய்வு நடத்தி அங்கு உள்ள மருத்துவமனையில் எச்ஐவி எலிசா பரிசோதனை செய்த ஆறு பேருக்கு எச்ஐவி கண்டுபிடிக்கப்பட்டது. முதல்முதலில்

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் ஆறு பேருக்கு எச்ஐவி தோற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது.

எச்ஐவி வைரஸ் என்பது தகாத உறவுகளால் மட்டும் வரக்கூடியது அல்ல. நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஊசியில் உள்ள ரத்த தேக்கத்தால் அதனைத்தொடர்ந்து மற்றவர்களுக்குப் பயன்படுத்தும் பொழுது உருவாகும். கர்ப்பிணி பெண்கள் மூலமாகக் குழந்தைகளுக்கும் பாதிப்பு வரலாம். இதனால் ரத்தவங்கிகளிலும் எச்ஐவி இல்லை என்ற சான்றிதழ்கள் பெற்ற பின்பு அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் போன்ற விதிமுறைகள் உள்ளது.

எச்ஐவி வைரஸ் என்பது ஒருவருக்குத் தாக்கம் ஏற்பட்டால் பத்து ஆண்டுகள் வரை அறிகுறிகளும் தெரியாது பத்தாண்டுகளுக்கு மேல் தான் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போது அவர்கள் மரணத்தின் நுழைவாயிலில் இருப்பார்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் எந்த மருந்து பயனற்றதாகஇருக்கும்.

மனிதனை எளிதில் கொள்ளக் கூடிய இந்த நோய்க்குக் குணப்படுத்தக்கூடிய மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் ஏஆர் டி என்று சொல்லப்படும் ஆண்டி ரெட்ரோ வைரஸ் தெரப்பி என்ற சிகிச்சையை மேற் கொள்வதன் மூலம் ஆயுட்காலத்தைச் சிறிதுநீடிக்கலாம்.

உலகில் கணக்கெடுப்பின்படி 13 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் 21.40 லட்சம் பேர் உள்ளனர். பெண்கள் மட்டும் 8லட்சம் பேர், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் உள்ளனர்.

இந்த நோய்க் குறித்து மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம்நடத்தப்படுகின்றன.

இதன்மூலம் எச்ஐவி தொற்று இல்லாத நாடாக இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்க வேண்டும் அதற்கு ஒவ்வொரு இந்திய மாநிலமும் தனிமனிதஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.

எச்ஐவி இல்லாத தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்வோம். 

மேலும் படிக்க:

India Stands 3rd in AIDS

Post a Comment

0 Comments