இந்தியன் ஆர்மியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு  பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியன் ஆர்மியில் 129-வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் போஸ்ட் பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் மத்திய அரசால் நிரப்படவுள்ளன. 

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு எஸ்எஸ்பி இண்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


பணியின் பெயர்
129-வது டெக்னிக்கல் கிராஜூவேட் பணிகள்
வயது வரம்பு
21 முதல் 27 வயது வரை
கல்வித் தகுதி
இன்ஜினியரிங் பிரிவு பட்டதாரிகள்
பணியிடங்கள் எண்ணிக்கை
40
சம்பளம்
ரூபாய் 56,100 முதல் 2,50,000 வரை
பணியிடம்
இந்தியா முழுவதும்



பாதுகாப்புத்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 40 ஆகும்.  இன்ஜினியரிங், சிவில், ஆர்கிடெக்சர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங்  போன்ற துறைகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



கல்வித் தகுதி: 
இன்ஜினியரிங்  பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.  பல்துறை இன்ஜினியரிங் சேர்ந்த  மாணவர்கள்  விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

வயது வரம்பு/ சம்பளம்:
மேலும் 20 முதல் 27 வயதுள்ளோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த துறைகளுக்கு ஏற்ப ரூபாய் 56,100 முதல் 2,50,000 வரை சம்பளத் தொகை பெறலாம். 

விண்ணப்பம்:
அறிவிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து ஆன்லைனில் அதிகாரப்பூர்வ தளத்தில் அடிப்படைத் தகவல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 28, 2018 ஆகும். 
எழுதுத்து தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரி 2019 இல் நடைபெறும்.



மேலும் படிக்க:

சென்னையை பணியிடமாக கொணட் நேசனல் செண்டர் பஃர் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேணெஜ்மெண்டில் வேலைவாய்ப்பு


Post a Comment

0 Comments