வளங்கள் சரிசமமாக பங்கீடு செய்ய வேண்டும்!

இலவசங்கள்  கொடுப்பது குறித்து நடந்த சர்கார் பட சர்ச்சையினை தொடர்ந்து இலவசங்கள் தேவையா  வேண்டாமா என்று கேள்விகள் எங்கும் எழுந்த வண்ணம் உள்ளது

இலவசங்கள் தேர்தலுக்கு பிறகு கொடுப்பது, நல்லது என்றும் தேர்தல் காலத்தில் அறிக்கையில் தெரிவிப்பதால் மக்களை இலவசங்களை நோக்கி நகர்த்தி  கட்சிகளின் இலவசங்களுக்கு ஏற்ப மக்கள் ஓட்டுகள் மாறின என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இலவசங்கள் என்ற பெயரை ஒரு ஆளும் கட்சியோ அல்லது ஆளவிருக்கும் கட்சியோ வழங்குவது தவறு ஆகும்.  இலவசங்கள்  வழங்கும் காலத்தைப் பொருத்து  தவறு சரி என்ற மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. 
என்னைப் பொருத்தவரை இலவசங்கள் என்ற பெயரில் எது வழங்கினாலும் அது தவறு என்பது என் கருத்து.  ஜனநாயகத்தை விரும்பும் அரசாங்கம் ஜனநாயகப் பாதையில் மக்களுக்காக உண்மையாக இயங்க விரும்பும் அரசாங்கம் நிச்சயம் இலவசங்கள் பற்றி சிந்திக்காது. 
கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து, போன்றவற்றினை  அரசாங்கம் மட்டுமே நடத்த வேண்டும். ஒரு அரசின் அடிப்படைத் தகுதியே அந்த அரசினால் மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகளை சரியாக கொண்டு சேர்க்க வேண்டியதுதான், அரசின் அடிப்படை கடமையாகும். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் சுயநலமற்ற மற்றும் தேவையான அரசாங்கம் ஆகும்.

நாட்டு மக்கள் வாழும் இடங்களான கிராமங்கள், நகரங்களில் அந்தந்த இடங்களுக்கு ஏற்ப அடிப்படை  தேவைகளை சரிசமாகப் பகிர்ந்து, இரு பகுதியில் வாழும் மக்களையும் உழைக்க வைத்து அதன் மூலம் பெறும் வருமானங்களை  முறையாக பங்கீடு செய்ய வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். 

மக்களை சுயமாக சிந்தித்து செயல்பட வைக்க வேண்டும். நாட்டின் எட்டு திசைகளிலும் எப்பகுதியில் எந்த தேவை குறைவு,  மேலும் தேவைக்கதிகமான வளங்களை  எங்கு கொடுத்து தேவைகளை ஈடு செய்வது, யாருக்கு எந்த பொருள் தேவை என்பதை பற்றிய முழு அறிவு அரசுகளுக்கு  இருக்க வேண்டும். 

சுயநலமற்ற சுரண்டலை எதிர்த்து, ஊழல் இல்லாத அரசு அமைத்து தருகின்றோம் என்று கூவும் அரசியல்வாதிகளை விட, இந்த பிரச்சனைக்கு  இதுதான் தீர்வு என ஆக்கப்பூர்வ திட்டங்களை எந்த அரசியல்வாதி முன்னெடுக்கின்றாரோ அவருக்கு வாக்களியுங்கள். 

யாதும் ஊரே யாவரும் கேளீர் 
திரைக்கடல் ஓடி திரவியம் தேடு 
என்று பாடல் உள்ள பூமியில்தான் பிரித்தாலும் கொள்கைகள் கொண்ட அரசியல் தலைவர்கள் அதிகம் பேர் உள்ளனர். 

அரசின் அடிப்படை கடமை பொதுமக்களின் தேவையை நிறைவேற்றுவது. சரியான வேலைவாய்ப்பு, வளங்களை முறையாகப் பங்கிடுதல்,  வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒன்றுப்படச் செய்யவேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.

இலவசங்களால் தேவையா:
இலவசங்களால் நாம் வீழவில்லை ஆனால் இலவசம் என்ற  மோகத்தை மக்களிடையே சில சுயநலவாதிகள் விதைக்க முற்ப்படுகின்றன. 
தேவைகள் இடம் பொருள், வேலை செய்யும் காலம், ஆகியவை பொருத்து மாறுபடும். 
இலவசத்தால் தான்  படிப்பவர்களின் எண்ணிக்கை பெருகுகின்றது எனில்  எதிர்காலத்தில் உழைக்காமல் கிடைத்த பொருள்கள் மற்றும் வளத்தினால் செய்ய வேண்டிய அறம் மக்களால்  மறக்கப்படும். அங்கே இலவசத்தால் கிடைத்த பொருட்களுக்கான மதிப்புகள் குறையும்.
இலவசத்தினால்  உழைக்கும் எண்ணம் மக்களிடையே குறைந்து போகும் வாய்ப்புகள் உள்ளன. பொது நலம் விரும்பும் அரசு இலவசம் வழங்க வேண்டுமென்ற முடிவில்  இருக்குமெனில், தேவையுள்ளோர்க்கு மட்டும் சென்று அடையுமாறு கொடுக்கலாம் அதனை இலவசம் என்று குறிப்பிட்டு கொடுத்தல் எதிர்காலத்தில் நல்ல விளைவுகள் ஏற்படுத்தாது.

அதே சமயத்தில் வளங்களை இல்லாதவர்களுக்கு பங்கீடு செய்ய முன்வரும் அரசின் நடவடிக்கைகள் என்றும் பாரட்டுக்குறியது. ஆளும் அரசுகள் அது குறித்து சிந்துத்து செயலாற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments