டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வுக்கான அரசியல் அமைப்பு சிறப்பு அம்சங்கள்!

போட்டி  தேர்வுகளில் பொது அறிவு மொழிப் பாடங்கள் முக்கிய பங்கு வகிப்பவை டிஎன்பிஎஸ்சி குரூப் 2  முதன்நிலை தேர்வு வெற்றி கரமாக எழுதிய மற்றும் எழுதாத தேர்வர்கள் அனைவருக்கும் பொது அறிவு பாடத்தை படிப்பது மற்றும் அடுத்தடுத்த தேர்வுக்கு தயாராகி படிக்கும் பொழுது விரிவாக படித்து அதனை திரும்ப படித்தல் மூலம் ரிவைஸ்  செய்து பாடங்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

இந்திய அரசியல் சட்டம் முக்கியமாக ஒரு எழுதப்பட்ட அரசியல் அமைப்பு ஆகும்.  எழுதப்பட்ட அரசியல் அமைப்பு என்பது  குறிப்பிட்ட கால அளவில் எழுதி அதனை எப்படி பயன்படுத்துவது மேலும் கால மாற்றத்தால்   எந்ததெந்த தேவைக்கு எப்படி திருத்துவது போன்ற  விவரங்கள் எல்லாம் எழுதிய அரசியலமைப்பு முறையில் இருக்கும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது  இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் வடிவமைக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டு  ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தியாவை காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த  பிரிட்டிஷ் அரசியல் அமைப்பானது எழுதப்படாத அரசியல் அமைப்பு ஆகும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது உலகின் மீக நீளமானது ஆகும். இது 395 பிரிவுகளையும், 12 அட்டவணைகளையும் கொண்டது. ஆனால் அமெரிக்காவின் அரசியல் அமைப்பு சட்டமானது 7 பிரிவுகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலமைப்பின் நெகிழ்வுத் தன்மை:
அரசியல் அமைப்புச் சட்டம்  நெகிழ்வானது என்று அழைக்கப்படும். அது எழுதப்படட்து என்ற போதிலும் தேவைக்கு ஏற்ப அதனை  திருத்தி எழுதலாம் என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷின் அரசியல் அமைப்பு நெகிழ்வு தன்மை உடைய திருத்தங்களை கொண்டது ஆகும்.  இந்தியாவின் அரசியல் அமைப்பு அதன் சட்டத்தைபொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றது.

இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்:
இந்திய அரசியல் அமைப்பானது 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் 1935இன் படி பெறப்பட்டது. அப்பொழுது கூட்டரசு முறை, ஆளுநர், அலுவல், நீதித்துறை, பொதுத் தேர்வு ஆணையங்கள் அவசரகாலத் திட்டங்கள் ஆட்சி முறை சார்ந்த விவரங்கள் அமைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசியலமைப்பு முறையிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய நடைமுறைகள், நாடாளுமன்ற அரசு, சட்டத்தின் படியான விதி, சட்டமியற்றும் செய்முறை ஒற்றைக்குடியுரிமை கேபினெட் முறை, தனியுரிமை நீதிபோராணை,  நாடாளுமன்ற சலுகைகள் மற்றும் ஈரவை முறை ஆகியவற்றைப்பெற்றுள்ளது. 

அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து உச்ச மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை துணை குடியுரிமை,  குடியரசு தலைவர் பதவி, குடியரசு தலைவர் மீதான அரசியல்  குற்றசாட்டு, நிதிப்புனராய்வு, நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் போன்றவை பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது. 

அயர்லாந்து அரசியலமைப்பு ராஜ்ய சபாவின் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல் மற்றும் குடியரசு தலைவர் தேர்தல் முறை, அரசின் வாழிகாட்டு முறை  நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பு பெற்றது. 

கனடா அரசியலமைப்பு: 
உச்சநீதிமன்ற ஆலோசனை எல்லை ஆளுநர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவது போன்ற மீதமுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பது, உறுதியான மத்திய அரசு மேலும் மத்தியில் வலிமையான கூட்டாட்சி போன்றவை பெறப்பட்டன. 

ஆஸ்திரேலியா அரசியலமைப்பிலிருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்ட அமர்வு, வணிகம் மற்றும் கலப்பு, பொதுப்பட்டியல் போன்றவை இணைக்கப்பட்டது. 

ஜெர்மனியிலிருந்து அவசர கால நெருக்கடி நேரத்தில் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக தடை செய்தல் போன்றவைப் பெறப்பட்டது. 



ரசியா அரசியலமைப்பிலிருந்து அடிப்படை கடமைகள் மற்றும் முகவுரையின் நீதிக் குறிக்கோள் எடுக்கப்படட்து. 

பிரெஞ்சு அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குடியரசு பெறப்பட்டது.

தென்னாப்பிரிக்கா அரசியலமைப்பிலிருந்து  சட்டத்திருத்த செயல்முறை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தல் பெறப்பட்டது. 

ஜப்பான் அரசியல் அமைப்பானது சட்டத்தினால் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை கொடுத்தது.

ஐந்தாணடு திட்டங்கள் ரசியாவிலிருந்து   பெறப்பட்டன.

நாடாளுமன்ற ஜனநாயகம்: 
இந்தியா, நாடாளுமன்ற வடிவிலான ஜனநாயகம் பெற்றுள்ளது. இதனை பிரிட்டிஷ் அமைப்பு முறையிலிருந்து பெற்றது. நாடாளுமன்ற ஜனநாயகமானது சட்டமியற்றுவோர்க்கு நிர்வாகத்திற்கும் மிக நெருக்கமான உறவு நிலவுகின்றது. 



அமைச்சரவை என்பது நாடாளுமன்ற சட்ட உறுப்பினர்களின் நடுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.  அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடையது. உண்மையில் அமைச்சரவை பதிவியில் நீடித்திருப்பது, நாடாளுமன்ற நம்பிக்கையை பெற்றிருக்கும் காலம் வரை அரசு நடத்த முடியும். 

இந்தியாவில் குடியரசு தலைவர் அரசின் தலைவராவார்.  அரசியலமைப்பின்படி குடியரசு தலைவர்கென அதிகாரங்கள் உள்ளன. அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் குடியரசு தலைவர் ஆனால் நடைமுறையில் அதிகாரங்கள் பெற்றவர் பிரதம அமைச்சர் ஆவார்.  இவரின் தலைமையில் தான் அமைச்சரவை குழு ஆலோசனைகளின் பேரில் செயல்படுவார். 

அடிப்படை உரிமைகள்: 
ஒவ்வொரு மனித உயிரும் நல்ல வாழ்க்கையை பெற்று, சில உரிமை அனுபவிக்கும் உரிமைகளையும் பெற்றவராகிறார். நாட்டின் குடிமகன், இவ்வாறே ஜனநாயகத்தின் குடிமகன்கள் அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டியவர்களாவார்கள்.  இந்தியாவின் அரசியல் சட்டம் அத்தகைய உரிமைகளுக்கு அடிப்படை உரிமைகள் என்ற வடிவத்தில் உத்திரவாதம் அளித்துள்ளது. 

இந்திய நீதியியல் அமைப்பானது நீதியியல் உரிமைகளை சுதந்திரமாக இந்திய குடிமகன்கள் பெறமுடியும். அவ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நீதிமன்றத்திற்குப் போக முடியும். 

அரசுக் கொள்கையினை வழிகாட்டி நெறிகள்: 
இவ்வழிகாட்டி நெறிகள் முறை இலக்கு சமூக ரீதியான பாரபட்சத்தை அகற்றுவது பெருந்திரளான மக்களின் வறுமையை போக்கி சமுக நலன்களை உறுதிப் படுத்துவது போன்றவதாகும். 

அடிப்படை கடமைகள்: 
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் 42-வது  திருத்தம் மூலம் அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய குடிமகனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை கடமைகளை பின்பற்ற  வேண்டிய பொறுப்புடையவராகிரார். 

சுதந்திர மற்றும் ஒருங்கிணைப்பு: 
இந்தியா ஒருங்கிணைந்த நீதியியல்  நாடாகும். இந்திய நீதியியல் அமைப்பானது உச்சநிலை நீதிமன்றமாக விளங்குகிறது. உச்சநீதிமன்றத்திற்கு கீழ் நிலையில் உயர்நீதிமன்றங்கள் உள்ளன. 

உயர்நீதிமன்றங்கள் தமக்குக் கீழ் நிலையில் உள்ள நீதிமன்றங்களை அடித்தளமாகவும் உயர்நீதிமன்றங்கள் நடுவிலும் உச்சநீதிமன்றம் மேல்முனையாகவும் அமையும். 

நீதியியல் அமைப்பு எல்லா குடிமகன்களுக்கு ஒரே சீரான நீதியியல் அமைப்பு எல்லாக் குடிமக்களுக்கும் நீதியை  முன்னெடுக்கவும் உறுதிப்படுத்தவும் இலக்கை கொண்டுள்ளது. 

இந்திய நீதியியல் பிரிவுகள் சுதந்திரத்தை உறுதிப்படுத்துக்கிற அமைப்பு ஆகும். ஆகவே நிர்வாகப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவுகளின் செல்வாக்கில் தனித்து இருக்கின்றது. 

ஒற்றை குடியுரிமை:
ஐக்கிய அமெரிக்க குடியரசுகளின்  குடிமக்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெற்று அனுபவிக்கின்றனர். இந்தியாவில் அமைதிருப்பது ஒற்றைக் குடியுரிமை ஆகும். இந்தியாவில் எந்தப் பகுதியில் வசித்தாலும் நீங்கள் இந்தியர் என்று தான் பொருள்படும். 

வாக்குரிமை: 
இந்தியாவில் வயது வந்தோர் வாக்குரிமை அடித்தளத்தின் மீது இந்தியா ஜனநாயகமாக செயல்படுகின்றது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் 18 வயது நிரம்பியிருந்தால் சாதி, இனம், மதம் அல்லது தேர்தல்களில் வாக்குரிமை என்ற வழிமுறையின் மூலமாக இந்தியாவில் அரசியல் சமத்துவம் நிறுவப்பட்டுள்ளது. 

அவசர நிலைக்கால விதிகள்: 
அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின்  சாதரண காலங்களில் செயல்படுவது போல அரசாங்கம் செயல்பட முடியாமல் போகும் சூழ்நிலைகள் எதிர்காலத்தில் உருவாககூடிய சூழ்நிலைகளான  போர் வெளிநாட்டு, ஆக்கிரமிப்பு ஆயுதம் தாங்கிய கலகம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அவசரநிலை,

மாநிலங்களில் அரசியல் சட்டரீதியான நிர்வாக இயந்திரம் தோல்வி அடையும் சூழ்நிலையில்  அவசர காலநிலை மற்றும் நிதியியல் நிலை உருவாக்கலாம். 

இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு: 
இந்தியாவில் அரசியல் சட்டம் அரசாங்கத்தின் ஆட்சி அமைப்பை நிறுவியுள்ளது. கூட்டமைப்பினுடைய அனைத்து வழக்கமான சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.
மத்திய மாநில அதிகாரங்களின் பிரிவினைகள், எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டம், அரசியல் சட்டத்தின் உச்ச மேல்நிலை, அரசியல் சட்டத்தின் உறுதிதன்மை சுதந்திரமான நீதித்துறை மற்றும்  இரண்டு சட்டமியற்றும் அவைகள் செயல்தன்மை கொண்டது. 

ஒரு வலிமையான மத்திய அரசின் கீழ்  அரசியல் சட்டம் அரசியல் சட்டத்தின் நெகிழ்வு தன்மை, ஒருங்கிணைந்த நீதித்துறை, மாநிலஆளுநர் மத்திய அரசினால் நியமனம் செய்யப்படுதல் இன்னப் பிற அம்சங்கள் உடையவை ஆகும். 

இந்திய அரசியல் அமைப்பின் வடிவத்தில் கூட்டாட்சித் தன்மையுடன் ஆனால் உள்ளடக்கத்தில் ஒற்றைத் தன்மையுடன் வேறுவேறு வகையில் விவரிக்கப்படும். 

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான தேர்வு முறை விளக்கங்கள்!

குரூப் 2 எழுத போறீங்களா இந்த புத்தகங்களை படிக்காமா போகாதீங்க!

Post a Comment

0 Comments