மருத்துவப் பயன் மிக்க நெல்லிக்காயில் செய்யும் எளிய ஊறுகாய்!!!!!!!!!

தலை முதல் கால் வரை மருத்துவப் பயன் மிக்க நெல்லிக்காயினை பல்வேறு வகைளில் பயன்படுத்தலாம். மற்ற பழ வகைகளான ஆப்பிள், எழுமிச்சை, ஆரஞ்சு இவைகளை விட வைட்டமின் சி மிக அதிகமாக நெல்லிக்காயில் உள்ளது.
தினமும் ஒரு நெல்லிக்காயை எடுத்துக் கொண்டால் சர்க்கரை குறைபாட்டை கட்டுப்படுத்தலாம். மேலும் இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எழும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக உகந்தது. ரத்த சோகைக்கும் பயன்படுகிறது. தலை முடி வளர்ச்சிக்கு இது எண்ணெய் வகைகளில் பயன்படுகிறது. எடையை குறைக்க காலை பொழுது வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றில் இஞ்சி சாறு கலந்து பருகினால் உடல் எடை குறைந்து நல்ல தோற்றத்தை பெறலாம்.



இப்படி பல்வேறு மருத்துவப் பயன் மிக்க நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஊறுகாய் செய்யும் முறையைக் காணலாம்.

நெல்லிக்காயினை நன்கு கழுவி அதன் விதை பகுதியை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்து கிளரி நான்கு முதல் ஐந்து நாட்கள் பகல் நேரத்தில் வெயிலில் உளர வைத்து எடுக்கவும்.

பாக்கெட் மிளகாய் தூள் சேர்ப்பவர்கள் அதனை உபயோகிக்கலாம் அல்லது மிளகாயினை சுடு தண்ணீரில் சேர்த்து ஊர வைத்து அரை மணி நேரம் கழித்து அதனை அரைத்து விழுதாக்கிக் கொள்ளலாம், இல்லயெனில் சுடு தண்ணீர்க்கு பதில் சாதாரண தண்ணீரில் 2மணி நேரம் ஊரவைத்து அரைத்துக் கொள்ளலாம்.

பின் ஒரு வானலியில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுத்து அதனை பொடி செய்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் அரைத்த கடுகு மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளரவும். பின் அரைத்து வைத்த நெல்லிக்காய் மற்றும் அரைத்த மிளகாய் சேர்க்கவும். பின் ஊறவைத்த நெல்லிக்காயை அதனுடன் சேர்த்து பின் உப்பு சிறிதளவு மட்டும் சேர்க்கவும் ஏனெனில் நாம் ஏற்கனவே நெல்லிகாயினை உப்பு சேர்த்து ஊர வைத்துள்ளோம். ஆகவே சிறிதளவு சேர்த்தால் போதுமானதாகும். இதனை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவும். அதில் உள்ள எண்ணெய் பிரிந்து வரும் பதம் வந்ததும் அடுப்பை அனைத்துவிடவும். இப்பொழுது இந்த நெல்லிக்காயை எடுத்து தனியாக பாத்திரத்த்ல் சேகரித்து உபயோகிக்கலாம்.



இந்த ஊறுகாய் தயிர் சாதம் மற்றும் சப்பாத்தி தோசை போன்ற உணவு வகைகளுக்கு சிறந்ததாக இருக்கும்.

வேறு விதமாக இந்த ஊறுகாயின் செய்முறையில், நெல்லிக்காயினை நன்கு கழுவி அதனை முழுதாக அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் அதன் விதைப்பகுதி கையாலேயே தனியாகப் பிரிக்க முடியும். இப்படி வேக வைத்து சிறிய துண்டுகளாக்கிய நெல்லிக்காயினை மேலே கூறிய அதே முறையில் தாளித்து எடுத்து தனியாக சேகரித்து உபயோகிக்கலாம். அதிக நாட்கள் ஆகாமல் விரைவாக உடனே ஊறுகாய் செய்ய இம்முறையில் நெல்லிக்காயினை ஊரவைக்காமல் வேகவைத்து உடனடியாக ஊறுகாய் செய்யலாம்.
WRITTEN BY  ICON OF SLATEKUCHI: SRIMATHI

Post a Comment

0 Comments