வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் மழை வாய்ப்பு!

அந்தமானில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்ற வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார். 

கஜா புயலானது தமிழகத்திலிருந்து கரையை கடந்து சென்ற கஜா புயலானது காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுவிழந்த நிலையில் மேற்கு நோக்கி நகர்ந்து கேரளாவை கடந்து லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைப்பெற்றிருப்பதால்  அடுத்து 12 மணி நேரத்தில் மீண்டும் புயல் வலுவுடன் மேற்கு திசை நகர்ந்து செல்லும் ஆகையால் இனி தமிழகத்துக்கு ஆபத்து இருக்காது. 



வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதனால் அடுத்து 24 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். 

நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தென் மேற்கு நோக்கி நகர்ந்து தென்  மேற்கு வங்ககடலில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் நோக்கி நகரும். மேலும் 19,20,21 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்கள் 18, 19, 20 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments