குரூப் 2 தேர்வுநிலை விளக்கங்கள் :
முதன்மை தேர்வு:
“மனமே எல்லாம் , நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே மாறுகிறாய் “.
என்ற கூற்றுகேற்ப நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நேர்மறை சிந்தனைகளை
உடன் கொண்டு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். குரூப் II தேர்வை பொருத்தவரை
முதன்மை தேர்வு 200 கேள்விகள் கொண்டது. 3 மணி நேரம் மொழி பாடத்தில் 100
கேள்விகள், பொதுஅறிவு பாடத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
மொத்தம் 300 மதிபெண்கள் கொண்டது. பொதுஅறிவு கேள்வியானது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் இருக்கும். கேள்விகள் கொள்குறி முறையான அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். சரியான விடையை விடைத் தாளில் குறிக்க வேண்டும். கேள்வி சரியாக பார்த்து விடையளிக்க வேண்டும். இவற்றில் கட் ஆஃப் அதிகம் எடுக்க வேண்டியது போட்டிதேர்வு எழுதுவோர் கையில் உள்ளது .
முக்கியதேர்வு :
குரூப் II இரண்டாம் நிலை தேர்வான முக்கியதேர்வானது ஒரே தாள் கொண்டது. 300 மதிப்பெண்கள் 3மணி நேரம் கொண்டது. விளக்கவுரை பதில் எழுத வேண்டும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் . விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழியில் எழுதலாம் .
கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள்:
1. இந்திய தமிழ்நாட்டளவில் அறிவியல் தொழிநுட்பத்தின் தாக்கம்
2. மத்திய தமிழக நிர்வாகத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள்
3. இந்திய தமிழகத்தின் சமூக சிக்கல்கள்
4. தேசிய நடப்பு நிகழ்வுகள்
5. தமிழக நடப்பு நிகழ்வுகள் .
குரூப் II நேரடிதேர்வு:
குரூப்
II தேர்வின் இறுதி நிலையாக நேரடிதேர்வு இது கேள்விகளுக்கு விடைதரும்
போக்கில் இருக்கும். நேரடிதேர்வானது தேர்வு எழுதுவோரின் பிறந்தயிடம்
அவ்விடத்தின் வரலாறு சிறப்புத்தன்மை மற்றும் தேர்வு எழுதுவோரின் பொழுது
போக்குகள், நடப்பில் நாடு மற்றும் சமுகசிக்கல்கள் பற்றி கேள்வியிருக்கும்.
தேர்வாளரின் சாமர்த்தியம், விடைகூறும் போக்கு ஆளுமை தன்மை கணக்கிட்டு
மதிபெண்கள் வழங்கப்படும். குரூப் 2 நேரடி தேர்வானது 40 மதிபெண்கள் கொண்டது ஆகும். இறுதியில்
முக்கிய தேர்வு மற்றும் நேரடிதேர்வு மதிபெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டு
தேர்வாளரின் சாதி பின்னனி ரிசர்வேசன் முறையில் மதிபெண் வழங்கப்பட்டு
தேர்வில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுகிறார். இதுவே குரூப் II
தேர்வுக்கு எழுதுவோர் அறிய வேண்டிய தேர்வு நிலைகள் ஆகும். இதனை முழுமையாக தெரிந்து கொண்டாலே படிக்க வேண்டிய முறைகளை தெளிவாக வகுத்து கொள்ளலாம்.
குரூப் 2 தேர்வகளின் தேர்ச்சி முறை:
குரூப் 2 தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுப்பு முறையானது தேர்வு எழுதவோ சாதி பின்னனி அதன்படி நிர்ணயித்த மதிபெண்கள் வைத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதண்மை தேர்வில் அவர் சேர்ந்த பிரிவு அவரை சேர்ந்தோர் கட் ஆஃப் மதிபெண்கள் பொருத்து மாறுபடும். நேரடி தேர்வுக்கும் அவ்வாறே ரிசர்வேசன் பெரும் பங்கும் வகிக்கும். மேலும் குரூப் 2 தேர்வை பொருத்தவரைக்கும் சில பதவிகளுக்கு மதிபெண்களோடு, பட்டப்படிப்புகள் மற்றும் தேவைப்படும் உடல் தகுதிகள் முன்னுரிமை பெறுகின்றன. இவ்வாறு அனைத்து நிலைகளையும் கடந்துதான் குரூப் 2 தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அடுத்த குறிப்பு 2 தேர்வுக்கு விண்ணப்பம் , விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான ஆதி முதல் அந்தம் வரை தேர்வு விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகளுடன் விவரங்கள்!
அடுத்த குறிப்பு 2 தேர்வுக்கு விண்ணப்பம் , விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான ஆதி முதல் அந்தம் வரை தேர்வு விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகளுடன் விவரங்கள்!
0 Comments