டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான ஆதி முதல் அந்தம் வரை தேர்வு விவரங்கள்!

குரூப் II நேரடிதேர்வு :
அரசு பணி என்ற கனவு கொண்டு படித்துவரும் தேர்வர்கள் உயர்ந்த பதவியில் பணியாற்றி மக்களுக்கும் அரசுக்கும் சேவையாற்ற விரும்புவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த அரசு அறிவிக்கும் பொழுது விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெறவும். 
 அத்துடன் குரூப் 2 தேர்வின் விவரங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் மற்றும் தேர்வு முறை குறித்து முழுமையாக அறிவோம்.  

டிஎன்பிஎஸ்சி என்ற கனவு வாரியத்தில் குரூப் II பதவி போட்டிதேர்வு கனவு கொண்டவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் பெருகி வருகின்றது லட்சக்கணக்கான தேர்வு எழுதுவோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வருடா வருடம் ஆண்டறிக்கை வெளிவந்த நாள் முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கென திட்டமிடுவோரின் எண்ணிக்கை பெருகி வருகின்றது .

“ கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை
உழைப்பாளிக்கு எதுவும் அதிக தூரமில்லை
நன்கு கல்வி பயின்றவனுக்கு எந்த இடமும்
வெளிநாடு இல்லை
இனிமையாக பேசுபவனுக்கு வேண்டாதவன்
எவனுமில்லை “.


குரூப் II :
குரூப் II தேர்வு என்பது கனவாக கொண்டவர்கள் எண்ணிக்கை பெருகிய வருகின்றது . குரூப் II என்பது தமிழ்நாட்டு பணி நியமன வாரியத்தின் கிரேடு II பொறுப்பாகும். இது குரூப் I பதவிக்கு அடுத்த நிலையாகும். குரூப் II துணை கமர்சியல் டேக்ஸ் ஆஃபிசர், தொழிலாளர் துணை கண்காணிப்பாளர், துணை வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளை கொண்டது. தேர்வானது ஆண்டறிக்கையின் படி தேர்வு தேதி அறிவிக்கப்படுகிறது, விண்ணப்பம், தேர்வுநாள், விண்ணப்ப தேதி, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் குரூப் 2 நோட்டிஃபிகேசனில் அறிவிக்கப்பட்டிருக்கும். குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள்முதல் அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வது முதல், படிக்குமுறை, மேலும் தேர்வுக்கு தயாராகும் யுக்திகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிலேட் குச்சி  மூலமாக அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு தயாரகும் முன்பு விண்ணப்ப விவரங்கள் அறிந்து, விண்ணப்பித்து, படிக்க தொடங்குங்கள் வெற்றி பெறுங்கள் . 

குரூப் 2 தேர்வுக்கான இந்த விவரப் பதிவு  புதிதாக தேர்வு எழுதுவோர்க்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்றும். எப்பொழுதும் இது எல்லோர்க்கும் எளிய வழியில் தேவையான  தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலேட் குச்சி இந்தியா தளத்தால்  உருவாக்கப்பட்டு  தேர்வர்களுக்கு சமர்ப்பிக்க படுகின்றது. 

வெற்றி என்ற ஒரு தாரக மந்திர சிந்தனையுடன் திட்டமிட்டு படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.  
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை எழுத  தேர்வர்களுக்கான தகுதிகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments