குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவந்ததும் நாம் அறிவிப்புகளை படித்தவுடன் நாம் அடுத்து செய்வது விண்ணப்பம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக முறையாக படித்துப் பார்த்து தேவையான தகவல்களை முறைப்படி கொடுத்து சப்மிட் செய்யவும்.
விண்ணப்பம் :
குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனிக்கவேண்டியவை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க இயலும். குருப் 2 தேர்வு எழுதுவோர் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். முதன் முறையாக போட்டி தேர்வு எழுதுவோர் டிஎன்பிஎஸ்சியின் பதிவுகட்டணம் ரூபாய் 150 சேர்த்து செலுத்த வேண்டும். ஒருமுறை செலுத்தினால் போதுமானது பதிவுகட்டணம் செலுத்தி தேர்வாளர்கள் தங்களுக்கான டிஎன்பிஎஸ்சி ஒதுக்கும் இணைய முகவரி மற்றும் கடவுசீட்டு என அழைக்கப்படும் பாஸ்வோர்டு உருவாக்கி கொள்ளலாம். மேலும் அதனை ஐந்து வருடம் மட்டுமே உபயோகிக்கலாம் பிறகு வேண்டுமெனில் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தி பெற வேண்டும் இணைய முகவரி புதிதாக பெற வேண்டும். ஆன்லைன் மற்றும் அஞ்சல், வங்கி செலான் மூலமும் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும். விண்ணப்பிக்க தொடக்க தேதி, விண்ணப்பிக்க இறுதி நாள், கட்டணம் செலுத்த இறுதி தேதி மற்றும் தேர்வு நாள் போன்ற விவரங்கள் அனைத்தும் தேர்வு அறிவிக்கையான நோட்டிஃபிகேசனில் அறிவிக்கப்பட்டிருக்கும். எஸ்சி என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்(எஸ்டி) மக்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு மட்டுமே விண்ணபிக்க சலுகையுண்டு மற்ற பிரிவினர்கள் மூன்று வாய்ப்புகள் மட்டுமே கட்டண சலுகை பயன்படுத்த முடியும். மூன்று வாய்ப்புகள் உபயோகித்தவர்கள் பின் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் .
விண்ணப்பிக்கும் அனைவரும் வழிமுறையை சரியாக பின்பற்ற வேண்டும் .
விண்ணப்பங்கள் விவரம் :
பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, இந்தியன் மற்றும் கல்வித்தகுதி தொடங்கி திருமணமானவரா போன்ற தகவல்களுடன் சாதி, மதம், முகவரி, விண்ணப்பத்தாரர் விரும்பும் பதவி, விண்ணப்பதாரர் ஊனமுற்றவரா அல்லது பெண் விண்ணப்பத்தாரறெனில் விதவை மற்றும் கணவனை பிரிந்தவரா என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் ஆண்கள் பாதுகாப்பு படையில் பணியாற்றியவரா என்பதை அறிவிக்க வேண்டும் .
சான்றிதழ் எண் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதிகள் போன்ற தேவைப்படும் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் விண்ணப்பத்தாரர் ஏதேனும் இயக்கம் மற்றும் கட்சியை சேர்ந்தவரெனில் அறிவிக்க வேண்டும் அத்துடன் எந்த ஒரு வழக்கிலும் பங்குகொண்டு முதன்மை நடவடிக்கையென அழைக்கப்படும் (எஃப்ஐஆர் ) சந்தித்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு நிர்வாகசீர்த்திருத்ததின் கிழ் 20% மதிபெண்கள் வழங்கப்படும் அவற்றை விண்ணப்ப படிவத்தில் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். இறுதியாக தேர்வு எழுதும் இடம் போன்ற தகவல்கள் கொடுத்து விண்ணப்பத் தகவல்களுக்கு உறுதி கொடுத்து சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெப்பம் நகல் இணைக்க வேண்டும். அதன்பின் பதிவு நம்பர் கிடைக்கும் அவற்றை சேமித்து அட்மிட் கார்டு பெறும் போது பயன்படுத்தலாம். மேலும் விண்ணப்ப இணைப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுதேர்வுக்குத் தயாரவோர் அதனைப் பயன்படுத்திகொள்ளலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஒன்று புரிந்துகொள்ளுங்கள் “கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும். விண்ணப்பிக்கும்போது இவ்வரிகளை மனதில் கொண்டு விண்ணப்பியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுகென விண்ணப்பிக்கும் முறையை விளக்கியுள்ளது அதற்கான லிங்கினை இங்கு இணைத்துள்ளோம். அதனை பின்ப்பற்றி அப்ளை செய்யவும்.
குரூப் தேர்வுக்கான அறிவிக்கப்படும் பதவிகள் குறித்து அடுத்த பதிவில் விளக்குகின்றோம். அதனைப் பின்ப்பற்றி தேர்வு செய்யவும்.
மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான ஆதி முதல் அந்தம் வரை தேர்வு விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகளுடன் விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான தேர்வு முறை விளக்கங்கள்!
0 Comments