டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான பதவிகள், சம்பளம் மற்றும் படிகள்!

 டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள  குரூப் 2 பதவிகள் குரூப் 1- ஐ அடுத்து  சிறப்பிடம் பெறும். மக்களுக்கு சேவையை நேரடியாகவோ மறைமுகவோ செய்ய  கூடிய ஒன்றாகும். இத்தகைய துறையில் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்பினை நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.


குரூப் 2  தேர்வில் அறிவிக்கப்படுள்ள பதவிகள்:

குருப் 2 பதவிகளுள் ஒன்றாகும். இது துணை கமர்சியல் ஆபிசர், துணை பதிவாளர் கிரேடு, அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் லேபர், ஜூனியர் எம்பளாய்மெண்ட்  ஆபிசர், ஸ்பெசல் அஸிஸ்டெண்ட் ஆபிசர், விஜிலென்ஸ் ஆண்டிகரப்சன்ஸ், ஸ்பெசல் அஸிஸ்டெண்ட் இண்டலிஜின்ஸ் விங் ஆப் போலீஸ்  டிபார்ட்மெண்ட், அசிஸ்டெண்ட் செக்ஸன் ஆபிசர் இன் டிஎன்பிஎஸ்சி, அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர், லோக்கல் ஃபண்ட் ஆடிட், சீனியர்  இன்ஸ்பெக்ச்டர் ஆப் கோ ஆப்ரேட்டிவ் சொசைடீஸ், தமிழ்நாடு  செக்கரட்டரியேட் ஆபிசர், தமிழ்நாடு லேபர் ஆபசர், முனிசிபல் கமிஷனர் போன்ற பதவிகளை கொண்டது  குரூப் 2 தேர்வு.  குறிப்பிட்ட பதவிகளுக்கு சட்டம் வணிகத்துறை பயின்றவர்களுக்கு  முன்னுரிமை வழங்குகிறது. 

 சம்பளம் மற்றும் படிகள்:
குரூப் 2 பணிகளின் கொடுக்கப்படும் 2017 இல் கொடுக்கப்பட்ட சம்பளம் 9,300  முதல் 34, 800 வழங்கப்படும். இவற்றில் பிடிப்புகள் அடங்கும். 7வது ஊதியக் குழு அறிவிப்பிற்க்கடுத்து சம்பள உயர்வுக்குப் பின் ரூபாய் 36,900 முதல் ரூபாய் 1,16,600 வரை வழங்கப்படுகின்றது. மேலும் அரசின் அறிவிப்புகள் காலகட்டத்திற்கேற்ப மாற்றங்கள் நிகழலாம். 

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவோர்கள்  அரசின் சலுகைகள் மற்றும் பணிகளில் பணியாற்றும் அரிய வாய்ப்பினைப் பெறலாம்.

மேலும் குரூப் 2 தேர்வுக்கான பாடப்பிரிவுகள்,  தேர்வுகளின் நிலை  குறித்து அடுத்த பதிவில் அறிவோம். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments