பாதுகாப்பான பட்டாசுகள் வெடிங்க தீபாவளியை ஒளிரட்டும் தீபாவளி

தீபாவளி பண்டிகைக்கு இன்னும்  சில மணிநேரங்களே உள்ளன பட்டாசுகள்  விற்பனை பெருமளவில்  சூடுப்பிடித்துள்ளது. பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்கும் பணிகள் 90 % பேர் முடித்துவிட்டனர்.   நகரங்களின் முக்கியப் பகுதிகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 


பட்டாசுகள் தீபாவளியன்று வெடிக்க  நிபந்தனைகளும் நேரங்களுக் கொடுக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடவே அரசு மக்களின் நலன் கருதி  விதிமுறைகளை விதித்துள்ளது. 
 
காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,  மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

பட்டாசுகள் பாதுகாப்பாக வெடிக்க சில டிப்ஸ்கள்:
 பட்டாசுகள் வாங்கும் பொழுது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.
குடியிருப்பு மற்றும் குடிசை பகுதிகளில் பட்டாசுகள்வெடிப்பதை தவிர்க்கவும்
பட்டாசுகள் வெடிககும் பொழுது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் நீர் மற்றும் முதலுதவி  பொருட்கள் அருகில் வைக்கவும். 

 பெற்றோர்கள் கண்காணிப்பில் பட்டாசுகள் வெடிப்பது நல்லது ஆகும். 

தீபாவளி சமயத்தில் தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரால் கழுவி மருத்துவமணைக்கு செல்லவும். 

பட்டாசுகளை மைதானங்கள் போன்ற இடத்தில் வெடிக்கலாம். 

பருத்தி ஆடைகள் அணிந்து பட்டாசுகள் பயன்படுத்த வேண்டும். 

ஒளிரும் பட்டாசுகளான  புஷ்வானம் போன்றவற்றை வைக்கும் பொழுது நிமிர்ந்து  தள்ளி நின்று  பயன்படுத்த வேண்டும். 

பட்டாசுகள் வெடித்தபின்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 

மக்கள் கூடும் போக்குவரத்து பகுதிகளில் கவனமாக அறிவிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வைக்க வேண்டும். 

கம்பி மத்தாப்புகள் பயன்படுத்தப்பட்டபின்பு ஆட்கள் நடமாடும்  பகுதியில் கம்பிகளை போடுவதை தவிர்த்து யாரும் நடமடாத பகுதிகளில் போட வேண்டும். 

ராக்கெட்டுகள் பயன்படுத்தும் பொழுது திறந்தவெளியில் பயன்படுத்தலாம் குடிசை பகுதிகளில் ராக்கெட்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

அதிக சத்தம் தரும் ஒளி மாசு கொண்ட பட்டாசுகளை மக்கள் நடமாட்டம் இல்லா இடங்களில் வெடிக்கலாம். 

காற்று மாசு ஏற்படுத்தும் புகைகள் கொண்ட வெடிகளை வெடிக்கும் பொழுது புகையிலிருந்து காக்க மாஸ்க்குகள் அணிந்து வெடிக்கவும். 

மேலும் படிக்கவும்:

தீபாவளியன்று கங்கா ஸ்நானம் புஜை!

Post a Comment

0 Comments