டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்புகள் தேர்வர்களை மகிழ்விக்கும் பிரம்மண்டமான பணிவாய்ப்புகள்!

டிஎன்பிஎஸ்சியில் தேர்வர்களுக்கென சிறப்பான வரவேற்கதக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

சென்னையில் டிஎன்பிஎஸ்சியில் தேர்வு கட்டுப்பாடுகள் மற்றும் தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். 

குரூப் 4 தேர்வுக்கான சரிப்பார்ப்புகள் பணிகள் 35 நாட்களில் முடிக்கப்படும் என்றும் 2018இல் நடந்த தேர்வு அனைத்திற்குமான முடிவுகள் விரைவில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு முடிக்கும் என்றும்  அறிவிப்பினை செயலர் வெளியிட்டுள்ளார். 


இனிவரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சியின் குரூப்  1 தேர்வுகள் 10 மாதங்களில் முடிவு வெளியிடப்படும், என்றும் செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.  தற்பொழுது குரூப் 2 தேர்வு எழுத 6,26,503 பேர்  விண்ணப்பித்துள்ளதாகவும் நவம்பர் 11 குரூப் 2 தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான தேர்வு மையங்கள சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில் குரூப் 1 தேர்வு எழுதுவோர்க்கான தேர்வு முடிவுகள் மற்றும் மொத்த பணிகளும் 10 மாதங்களில் முடிவடையும் எனவும் செயலர் அறிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு 17,000  பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அதற்கான அறிவிப்புகள்  வெளியிடப்பட்டு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான  கால அட்டவணை ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும்.

டிஎன்பிஎஸ்சியில் கடந்த ஐந்தாண்டுகள் இல்லாத அளவிற்கு  காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அடுத்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு பொற்காலமாக அமையும் என்று  தேர்வர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!

Post a Comment

0 Comments