தீபாவளி பண்டிகை காலம் வந்துவிட்டது. வீதிகள் எங்கும் விழா கோலம் விண்ணைத்தாண்டும் பட்டாசுகளின் ஒளிவட்டம் தீபாஒளி நாளில் அதிகாலை எழுந்து எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து காலையில் பெரியோர்களிடம் ஆசி பெற்று வெடிகள் வெடித்து இனிப்புகள் பரிமாறி இனிதே தொடங்கும் தீபஒளி நாளை தித்திப்புடன் கொண்டாடுவோம்.
எண்ணெய் குளியல் கங்கா ஸ்நானம்:
எண்ணெய் தேய்த்து குளிக்க காலை 4 முதல் எழ வேண்டும் கதிரவனுக்கு முன்பு குளிக்க வேண்டும்.
காலையில் கங்கா ஸ்நானம் செய்யும் பொழுது தண்ணீரில் உள்ள பாத்திரத்தில் பொட்டுக்ள் வைத்து கங்கைக்குரிய ஆராத்தி எடுத்து குளிக்க வேண்டும். கங்கை என்ற மங்கையின் அருள் பெறலாம்.
நராகசுரனை அளித்து பிரம்ம முகூர்த்ததில் எண்ணெய் குளியல் லட்சுமி தாயார் செய்ய இறைவனிடம் பணித்தார்.
நல்லெண்ணையை கை பொருக்க காய்ச்ச வேண்டும். எண்ணெயில் மிளகு இட்டு எண்ணெய் பாத்திரத்தில் பொட்டு வைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பெரியோர்கள் ஆசியுடன் அவர்கள் கைகளால் எண்ணெய் வைத்து அட்சதை அருள் பெற்று குளிக்க வேண்டும்.
மகாலட்சுமி விரதம்:
நாரத பெருமானால் பெருமையாக விளக்கப்பட்டுள்ள மகாலட்சுமி விரதம் அன்னை மகாலட்சுமியின் அருள் பெற கடைப்பிடிக்கப்பட்டு வரும் விரதங்களில் முக்கியமானது ஆகும்.
அன்னை மகாலட்சுமியை அந்நாளில் வழிப்பட்டு அவள் அருள் பெற்று செய்த பாவங்களுக்கு பெறலாம் வாழ்வில் வளம் பெறலாம், சிலர் தீபாவளியன்று குடும்பத்தின் வழக்கங்களுள் ஒன்றாக மகாலட்சுமி விரதம் அனுசரிக்கின்றனர்.
ஆரம்ப காலங்களில் 21 நாட்கள் தீபாவளிக்காக விரதம் இருந்து தீபாவளி நாளில் விரதத்தை முடித்து வைத்தனர். தீப திருநாளில் அதிரசமும், அப்பமும் வைத்து நோன்பு கயிற்றுடன் பூஜை செய்து பக்தி சிரத்தையுடன் இருந்து வேண்டுவோர்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகமும் சற்புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. இந்நாளில் இவழக்கங்கள் பரவலாக கடைப்பிடிக்கப்படவில்லை.
பலன்கள்:
மகாலட்சுமி விரதத்தின் மூலம் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பெருகும்.
தம்பதிகளிடையே அந்யோன்யம் பெருகும். கருத்து வேறுபாடுகள் உதிக்காது.
பிரிந்திருந்த தம்பதியர்கள் சேர்ந்து வாழ வழி பிறக்கும்.
குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் தழைக்கும் என்பது நம்பிக்கையாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
புத்தாடை வாங்கும் பொழுது இறைவனுக்கென்று முதல் ஆடை வாங்க வேண்டும். இறைவனுக்கு முதலில் வாங்குங்கள் வேட்டி துண்டு வாங்கி அதனை பொதுவாக பூஜை வைத்து யாருக்காவது கொடுக்கலாம்.
0 Comments