குரூப் 2 தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி மொழிப்பாட குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பொதுத் தமிழ் பகுதி பகுதியினை படித்து முடித்தாகிவிட்டதா நீங்கள்  இன்னும் கையில் இருக்கும்  கொஞ்ச நாட்களை ரிவிசனுக்கு பயன்படுத்துங்கள் அது மிகவும் முக்கியனாது ஆகும்.  



கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் பகுதியினை நன்றாகப் பயிற்சி செய்யவும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள் தெரிந்திருக்க வேண்டும்.   சிறு பகுதியாக இருந்தாலும் முக்கியமானதாகும்.
 
அக்கம் - தானியம் 
அகத்தான் ஆம் - உள்ளம்  கலந்து
அகநிலா- விரிந்த நிலா
அகம் உள்ளம்
அகழ்வாரை- தோண்டுபவரை 
அகன்- அகம், உள்ளம்
அகன்று- விலகி
அங்கை- உள்ளங்கை
அசனி- இடி
அஞ்சுகம்- கிளி
அடவி- காடு
அடிமைச் செய்குவென்- பணிசெய்வேன் 
அணங்கு- தெய்வப்பெண்
அணல்- கழுத்து
அணி- அழகுக்காக அணியும்  நகைகள் 
அணித்தாய்- அண்மையில் 
அணிந்து- அருகில் 
அணியார்- நெருங்கி இருப்பவர்
அத்தம்- காடு
அதிசயம்- வியப்பு
அம்- அழகிய
அயலார்- உறவல்லாதோர்
அயில்-  கூர்மை
அரம்- வாளைக் கூர்மையாக்கும் கருவி
அரம்பை-வாழை
அரம்பையர்- தேவமகளிர்
அரவம்- பாம்பு
அரவு- பாம்பு
அரவுநீர்ச் சடையார்- சிவபெருமான்
அரற்றி- அழு 
அரா- பாம்பு
அரி- நெற்கதிர் 
அரியாசம்- சிங்காதனம் 
அரா- பாம்பு
அரி- நெற்கதிர் 
அரியாசனம-சிங்காதனம்
அரு- உருவமற்றது
அருத்தியன் - அன்பு உடையவன் 
அருவினை- செய்தற்கரிய செயல் 
அல்- இருள், இரவு 
அலகில- அளவற்ற
அல்கு-இரவு
அலகு இல்- அளவில்லாத்
அலங்கல்- மாலை
 அல்லல்- துன்பம் 
அல்லவை- பாவம் 
அல்லைத்தான்- அதுவும் அல்லாமல் 
அலறும்- முழங்கும்
அவல் -பள்ளம் 
அவியினும்- இறந்தாலும்
அழுக்காறு- பொறாமை 
அழுங்கி- மிக வருந்தி 
அளக்கில் கேள்வியார்- அளவற்ற நூலறிவினர்.
அளகு- கோழி
அளவின்று- அளவினனுடையது
அளைஇ- கலந்து 
அற்குற்ற- இருளையொத்த
அற்றே- போன்றதே
அறிகை- அறிதல் வேண்டும்
அறைகுவன்-செல்லுவன்
அறைந்த- சொன்ன
அன்பகத்து இல்லா- அன்பு உள்ளத்தில் இல்லாத்
அன்பிலது- அன்பில்லாத் உயிர்கள் 
அன்னவர் - அத்தகைய இறைவா 
அன்னத்தானும்- கேட்ட அளவிற்கு 
அனையார்- போன்றோர்
ஆ- பசு 
 ஆக்கம் - செல்வம் 
ஆகடியம்- ஏளனம் 
ஆகடியம்- ஏளனம்
ஆகுலம்- வீண்
ஆசவம்- தேன்
ஆசனம்- இருக்கை
ஆடவர்- ஆண்கள் 
ஆடி- கண்ணாடி  
ஆடுபரி- ஆடுகின்ற குதிரை
ஆடூஉ- ஆண்
ஆதிரம்- நெய் 
ஆபயன்- பால்
 ஆயகாலை- அந்த நேரத்தில் 
ஆயம்- ஆட்டம் 
ஆர்- அழகு 
ஆர்கலி நிறைந்த ஓசையுடைய கடல் 
 ஆரணம்- வேதம்
ஆர்வம்- விருப்பம்
ஆர்வலர்-அன்புடையர் 
ஆருயிர்- அருமையான உயிர்
ஆரை- கோட்டை மதில் 
ஆரைத்தான்- யாரைத்தான் 
ஆழி - கடல்
ஆழி- தேர்ச்சக்கரம், மோதிரம் 
ஆற்றல் - வலினை 
ஆற்றவும்- நிறைவாக
ஆற்றுணா- தட்டுச்சோறு 
ஆற்றுவார்- செயல் செய்பவர்
ஆறு- நல்வழி 
ஆறு- வழி 
ஆனம் குழம்பு
ஆன்ற -உயர்ந்த, நிறைந்த
இகல் - பகை
இகழ்வார்- இழிவுபடுத்துவோர்
இகுசு- மூங்கில் 
இசைபட- புகழுடன் 
இகுசு மூங்கில் 
இடங்கர்- முதலை
இட்டீடு- விவாதம் 
இடர்- இன்னல் துன்பம்
இடிக்கும்- கடிந்துரைக்கும்
இடித்தல்- கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
இடுக்கண்- துன்பம்
இடும்பை- துன்பம்
இடையல்- துகில் 
இனக்கருவம்படி- அவர்கள் மனம் கனியும்படி
இதனி- வெற்றிலை
இந்தனம்- விறகு
இந்து- சந்திரன், நிலவு
இம்மை- இப்பிறவி 
இமயன்- கூற்றுவன் 
இமைவார்- தேவா
இயைந்தக்கால்- கிடைத்தபொழுது
இரட்சகர்- காப்பவர்
இர்ட்சித்தானா?- காப்பாற்றினானா? 
இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்
இரவி- சூரியன் 
இருத்தி- இருப்பாயாக
இருநிலை- பெரிய உலகம், பெரிய நிலம். பெரியழகு
இருநிறம்- அகன்ற் நெஞ்சு
இருப்பாணி - இரும்பு ஆணி 
இருப்புமுளை- ஆணியின் நுனி 
இரும்பனை- பெரிய பனை
இரும்பொறை- பெரும்பொறுமை
இருள்- பகை 
இல்- பகை 
இல்- இல்லை
இல்லார்- ஏழை
இவண் நெறியில்- இவ்வழியில் 
இவுளி- குதிரை 
இழுக்கம்- ஒழுக்கம் இல்லாதவர்
இழைத்துணர்ந்து-நுட்பமாக ஆராய்ந்து
இளவல்- தம்பி 
 இளிவன்று-இழிவானதன்று
இளைப்பாறுதல்-ஓய்வெடுத்தல் 
இறந்தார்- வரம்பு கடந்தவர்
இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை 
இறுவரை- முடிவுக்காலம் 
இறை- தலைவன் 
இறைச்சி- வணங்கி
இறைஞ்சி- பணிந்து வணங்கி
இன்சொல்- இனிய சொல்
இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
இன்சொலினிதே- இனிய சொற்களைப் பேசுதலே 
இன்புறூஉம்- இன்பம் தரும்
இன்மை - வறுமை 
இன்னல்- துன்பம் 
இன்னா- தீங்கு
இன்னா- தீய 
இன்னாச்செல்- தீயச் செல்  
இனிய- நன்மை 
ஈகம்- சந்தனமரம் 
ஈங்கதிர்- சந்திரன் 
ஈஞ்சு- ஈச்சமரம் 
 ஈட்டம்- தொகுதி
ஈண்டிய -ஆய்ந்தறிந்த
ஈண்டு-இவ்விடம் 
ஈதல் - கொடுத்தல் 
ஈம்- தண்ணீர்
ஈயப்படும்- அளிக்கப்படும்
ஈயும்- அளிக்கும் 
ஈர்கிலா- எடுக்க இயலாத
ஈர்த்து அறுத்து 
ஈரிருள்- நால்வார்
ஈறிலி- கடவுள்
ஈறு- அழிவு, எல்லை 
ஈனல்-கதிர் 
ஈன்றல்- தருதல் -உண்டாக்குதல் 
ஈனும்- கதிர்
ஈன்றல்- தருதல்

மேலும் படிக்க:

கோடை கால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் 2018!

Post a Comment

0 Comments