கோடை கால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் 2018!

மூன்றாவது கோடை கால இளையோருக்கான ஒலிப்பிக் போட்டிகள் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் பார்க்யு பொலைட் பொர்றியோ மைதானத்தில் நடைபெற்றது. இதன் நோக்கம் FEEL THE FUTURE என அறிவிக்கப்பட்டது. இவ்விழாவின் தொடக்க நாள் அணிவகுப்பில் இந்தியா சார்பில் 
மாணுப்ஹகெர் கொடியை ஏந்திச் சென்றார். இதே போல் இறுதி நாள் அணிவகுப்பில் ஜெர்மி லால்ரின்னுங்கர் கொடியைய் ஏந்திச் சென்றார்.



முதல் முறையாக இப்போட்டிகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-18 தேதிவரை சிங்கப்பூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றது. முதல் வருடப் போட்டியில் 204 நாடுகள் கலந்துகொண்டு சீனா அதிக படியான பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பெற்றது. இது கோடை காலம் மற்றும் குளிர்காலம் என இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு இப்போட்டிகள் நடை பெற்றது.

இதில் 14-18 வயது  வரையென இளையோருக்கான பிரிவாக ஒலிப்பிக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 34 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 3998-வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் இந்தியா சார்பில் 47 வீரர், வீரங்கனைகள் பங்கேற்றனர். இறுதியாக நடைபெற்ற 2014 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

பதக்கப் பட்டியல்: 
ரஷ்யா மொத்தம் 59 பதக்கங்கள் 29தங்கம், 18வெள்ளி, 12வெண்கலம் முறையே பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது. சீனா மொத்தம் 36 பதக்கங்கள் 18தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் முறையே பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் ஜப்பான் மொத்தம் 39 பதக்கங்கள் 15தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் முறையே பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, ஒரு வெண்கலமாக மொத்தப் 13 பதக்கங்களுடன் 17வது இடத்தைப் பெற்றது.

இந்தியாவின் பதக்கப் பட்டியல் 2018:

தங்கம் வென்றவர்கள்:

ஜெர்மி லலரின்னுங்கர்(ஆண்கள் 62கிலோ): பளு தூக்குதல்.

மானு ப்ஹகெர்(பெண்கள் 10மீட்டர் ஏர் பிஸ்டல்): துப்பாக்கி சுடுதல்.

சௌரப்ஹ் சௌதரி(ஆண்கள் 10மீட்ட்ர் ஏர் பிஸ்டல்): துப்பாக்கி சுடுதல்.

வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:


ப்ரவீன் சித்ரவேல்(ஆண்கள்): ட்ரிபி ஜம்ப்(தடகளம்).

வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்:

துஷர் மானே(ஆண்கள்): 10மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல்.

மெஹுலி ஹொஷ்(பெண்கள்): 10மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல்.

டபாபி தேவி(பெண்கள்): ஜுடோ(44கிலோ)

லக்ஷயா சென்(ஆண்கள் ஒற்றையர்): பாட்மிட்டன்

சிம்ரன்(பெண்கள்): மல்யுத்தம்(ஃப்ரீ ஸ்டைல் 43கிலோ).

ஹாக்கி அணி(ஆண்கள்).

ஹாக்கி அணி(பெண்கள்).

சுரஜ் பன்வர்(ஆண்கள்): தடகளம்(5கிலோ மீட்டர்).

ஆகாஷ் மாலிக்(ஆண்கள் தனி): வில்வித்தை.


அடுத்து நடைபெறும் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகள்:

அடுத்து 2020 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜனவரி 9முதல் 22வரை சுவிட்சர்லாந்தில், லௌசன்னெ நகரில் ஸ்டெட் பிஎர்ரெ டீக்கௌபெர்டின் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அடுத்து நான்காவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் 2022 ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் டகார், செனிகல்லில் நடைபெற உள்ளது. இதுவே ஆப்ரிக்காவில் IOC(International Olympic Committe) ஆல் நடத்தப்படும் முதல் போட்டியாகும். 
WRITTEN BY  YOUTH ICON OF SLATEKUCHI: SRIMATHI B
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments