டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் பாதுகாப்பு முறைகள்!

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில்  வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கான சாதகமான சூழல் சென்னை வானிலை மையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 

வடகிழக்கு  பருவ மழை காலத்தில் துவங்குவதற்கு முன்பு தேவையானவற்றை வாங்கி இருப்பு வைத்திருத்தல் அவசியமாகும். பண்டிகை காலம் தொடங்கியதால் பண்டிக்கைக்கு தேவையான பொருட்களை பட்டியலிட்டு வாங்கி சேகரித்து வைக்கவும். 

பட்டாசுகளை வாங்கி அவற்றை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும்  தீபாவளியன்று மழை வந்தால்   கவனமாகப் பட்டாசுகளை வெடியுங்கள். 

பள்ளி மாணவர்கள் மழை காலத்தில்  கவனமாகச் சாலைகளில் சென்று வர வேண்டும். 

மழைகாலத்தில் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் நீர்  தேங்காமால்  பார்த்துக் கவனமாக இருக்கவும். 

குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கச் செய்யும் இந்தக் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதித்துத் தேவையான   பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுக்கவும்.


நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களைத்தான் டெங்கு கொசு அதிகம் கடிக்கின்றது. ஆகையால்  ஆரோக்கியமான உணவை மழைக்காலங்களில் சாபிட வேண்டியது அவசியமாகும். 

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ்  இஜிப்ட் கொசுக்கள் பகல் நேரத்தில் அதிகம் கடிக்கின்றன. 

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

5 முதல் 7 நாட்கள் காய்ச்சல் இருக்கும். 

102 முதல் 107 டிகிரி  வெப்பம் அதிகரிக்கும். 

கண்கள் மற்றும் தலைப்பகுதிகள் அதிக வலி கொடுக்கும். 

மூட்டும் தசையும் அதிகம் வலிக்கும்.அதிகமான சோர்வு தென்படும். 

வாந்தி வரலாம் அல்லது வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் தென்படலாம். 

வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. 

உடலில் அரிப்பும், சருமத்தில் சிறு சிறு கட்டிகள் ஏற்படும். 

டெங்கு  காய்ச்சல் அதிகரித்தால் மூக்கிலிருந்து ரத்தம் வரும். 

பாதுகாப்பு முறை:
வீட்டைச் சுற்றி  நீர்  தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கொசுவின் இனபெருக்கத்தினை கட்டுப்படுத்தலாம். 

தண்ணீர் தொட்டியில் அதிக நாட்கள் நீரினை சேகரிக்க வேண்டாம். மேலும் வீட்டைச் சுற்றி பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கவும். 

தலை முதல் கால்வரை முழுவதும்  போர்த்தியாவாறு உடைகள் அணிவது அவசியமாகும். 

வீட்டில் கொசு வலை  மாட்டித் தூங்கவும் அதனை  அடிக்கடி தூசு அண்டாதவாறு  தூய்மையாக வைக்கவும். 

குழந்தைகள் பெரியோர்கள் உள்ளோர் வீட்டில் கொசுக்கள் நுழையாதுவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்குத் துணிகளை உடனடியாகத் துவைத்து வைக்க வேண்டும். 

டெங்கு மருந்து: 
இதற்கான  பெரிய மருந்துகள் கண்டுபிடிக்கவில்லையென்றாலும் முன்னோர்கள் பப்பாளி இலையினை பரித்து அதனை நன்கு அரைத்துச் சாறெடுத்து குடித்தால் சரியாகிவிடும். மேலும் தினமும் நீல வேம்பு கசாயம்  குடித்து வருதலும் நலம் பயக்கும். 

சித்தமருத்துவ கடைகளில்  நீலவேம்பு  பொடி கிடைக்கின்றது அதனை சுடுநீரில் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும்.  

உலர்ந்த கருமை நிற திராட்சையினை 5 பழங்களை  நீரில்  5 மணி நேரம்    ஊரவைத்து  குடித்து வந்தால் உடலில் உள்ள தட்டை அணுக்களான பிளேட் லெட்ஸ் எண்ணிக்கையைச் சீராக்கி பார்த்துக் கொள்ளலாம். 

ஆரஞ்சு மற்றும் அரிசி கஞ்சி, இளநி,  காயகறி சூப், பப்பாளி, கொய்யா, எலும்பிச்சை போன்ற பழச்சாறுகள் எடுத்துக் கொண்டால் அதனால் உடலில் சீரண சக்தி அதிகரித்து நீர்ச் சக்தியினை தங்கச் செய்யும்.

Post a Comment

0 Comments