தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகள் 37,211 அரசுப் பள்ளிகள் மற்றும் 8,403 அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கிவருகின்றன. மேலும் 12,419 பள்ளிகள் உள்ளன. அரசு ஆண்டுதோறும் மாணவர்களின் கல்விக்காக 27,000 கோடி செலவு செய்கின்றது.
ஆங்கில பாடத்தில் திணரல்:
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் புலமை குறைவாக இருக்கின்றது. தமிழ் மொழியில் உள்ளது போன்ற ஒரு தெளிவு ஆங்கிலப் பாடத்தில் இல்லை ஆதலால் மாணவர்கள் உயர்கல்வியில் தொழிற்படிப்புகள் மற்ற துறைகளில் மிகுந்த போராட்டங்களை சந்திக்க நேரிடிடுகின்றது.
ஆங்கில கல்வி மற்றும் சி.பி.எஸ்.இ பாடங்களை படிப்பவர்கள் மாநில கல்வி பாடத்திட்ட மாணவர்களைவிட உயர் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் தகவல் தொடர்புத் திறன் கொள்ளும் திறன் போதுமான அளவில் பெறுகிறார்கள். இவர்களுடன் போட்டி போட முடியாமல் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத் திறன் குறைவாகவே இருக்கின்றது.
தமிழகத்தில் உள்ள 1000 பள்ளிகளுக்கு மேல் தலா 10 மாணவர்களுக்குக் குறைவாக இருக்கின்றனர். இவற்றால் அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் மூடப்படும் நிலை ஏற்படும். அரசு பள்ளிகளில் எல். கே.ஜி -யு.கே.ஜி வகுப்புகள் துவங்கி ஆங்கிலப்பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மற்ற மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளாக அது இருக்க வேண்டும் என வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக கல்வி செயலாளர் நவம்பர 8, 2018க்குள் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையானவை:
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் அவர்களுக்கான தேவைப்படும் அனைத்து பயிற்சிகளும் கொடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகராகக் கொடுக்கப்படும் பயிற்சிகளால்தான் மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆங்கில அறிவுடன் மற்ற திறன் பயிற்சிகள் முறையாகக் கொடுக்கப்பட சட்டம் இயற்றப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கற்று கொடுக்கும் ஆற்றல் அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுகென அங்கிகாரம் கொடுக்கப்பட்டு அவர்களையும் மற்ற பாடப் பள்ளி மாணவர்களுக்கு நிகராக உருவாக்கி வாழ்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தனித்து சிந்திக்கும் போக்கு, புதிய யுக்திகளை கையாண்டு சாதனைகளை படைத்து புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் திகழ வேண்டும்.
0 Comments