இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்துள்ளது. திங்கள் கிழமை இத்தகவல்களை வெளியிடப்பட்டது.
அக்டோபர் 23, 2018 ஆம் நாள் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைகளில் அத்துமீறித் தாக்கிய சம்பவத்தின அடுத்து இந்திய ராணுவம் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகத்தினை தாக்கிப் பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு தாக்குதல் நடத்துவதை கண்டிக்கவே இந்தத் தாக்குதல் நடத்துப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டும், இரு நாடுகளுக்கிடையே மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் தொடர்ந்து இது போன்ற அத்துமீறல்கள் நிறுத்தப்பட்டுப் பரஸ்பரம் நட்பு பாராட்டப்பட வேண்டும்.
சுதந்திரமாகி 70 ஆண்டுகளாகிவிட்டத்து இன்னும் பகைமை பாராட்டப்படுவதும். எல்லையில் ஊடுருவித் தாக்குதல் நடத்துதல் போன்ற போக்குகள் குறையவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு எல்லையில் ஏற்படும் சிறுசிறு இடையூரல்கள் தேவையற்ற கவனச் சிதறல்கள் ஏற்படும். இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு பரஸ்பரம் அமைதிபோக்கு நிகழ வேண்டும்.
0 Comments