பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வழக்காடு மன்றத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு  வழக்காடுதல் துறையில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

வழக்காடுதல் மன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 28 ஆகும். மேலும் வழக்காடு மன்றத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்களின் பெயர் ஆபிஸ் அஸிஸ்டெண்ட் ஆகும். 



வழக்காடு மன்றத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விதிமுறைகளின்   அந்தந்த பிரிவிற்கேற்ப வயது வரம்பில் சலுகையுண்டு அறிவிக்கையில் பார்க்கலாம். 


பணியின் பெயர்
ஆபிஸ் அஸிடெண்ட்
வயது வரம்பு
 30 வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
28
சம்பளம்
ரூபாய் 15,700 முதல் 50,000
பணியிடம்
தமிழ்நாடு   முழுவதும்


அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் சிறிய டெஸ்ட்கள் மற்றும்  நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு ரூபாய் 15,700 முதல் ரூபாய் 50,000 வரை சம்பளத்  தொகை பெறலாம். 

விண்ணப்பம்: 
வழக்காடு மன்றத்தில் வேலைவாய்ப்பு பெற  விண்ணப்பத்தாரர் பெயர் மற்றும் அடிப்படைத் தகவல்கள்  பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் பள்ளி தலமை ஆசிரியரிடம் அட்டஸ்டடு  கையெப்பம் பெற்று இணைத்திருக்க வேண்டும். வயது சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,  அரசு கெசட்டி ஆபிசரிடமிருந்து நன்னடத்தைச்  சான்றிதழ் பெற வேண்டும்.  மேலும் புகைப்படம் தேவைப்படின் அதனை இணைத்து அனுப்ப வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர்/ ஆதரவற்ற விதவைகள் முன்னுரிமை கோரினால் உரிய சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்படட் விண்ணப்பங்கள் மற்ற அடிப்படை சான்றிதழ்களை இணைத்து கிழே குறிப்பிட்டப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அரசு தலைமை வழக்குரைஞர், 
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம்.
 உயர்நீதி மன்றம், 
சென்னை -600104 
என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

முக்கிய தேதிகள்: 
தமிழ்நாடு வழக்காடு மன்ற பணிக்கு விளம்பரனம் வெளியிடப்பட்ட நாள் செப்டம்பர் 25, 2018 
விண்ணப்பிக்க தொடக்க நாள் செப்டம்பர் 25, 2018 
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள் அக்டோபர் 22, 2018 ஆகும். 




மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments