பெற்றோர்களின் கையில் குழந்தைகளின் எதிர்காலம்!

டீன் ஏஜ் பிள்ளைகளை கொண்ட பெற்றோரே  கொஞ்சம்  மாறுங்க பிள்ளைகளுக்கு நோ சொல்லி பழகுங்க. பிள்ளைகளை ராஜாவை போல் வளர்த்து நீங்கள் குஜாவாகி போகாதீர்கள்.  வாழ்வின் அருமை பெருமைகளை சொல்லி  வளருங்கள்.  தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதனை பெற்றோர்கள்  பிள்ளைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாலபாடமாகும். 



பண்புகள்: 
பிள்ளைகளிடம் அன்பு, கருணை,  பரிமாறுதல், நட்பு பாராட்டுதல், உதவுதல், விட்டுகொடுத்தல், ஒற்றுமையுடன் இருத்தல் போன்ற பாடங்களை எப்பொழுதும் வலியுறுத்தி கற்றுக் கொடுங்கள் இந்த பண்புகள் எதையேனும் பின்ப்பற்றவில்லையெனில் தண்டனை கொடுக்க தயாங்காதீர்கள். எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். 

ஒரு குழந்தைக்கு  வீடுதான் முதல் பள்ளி அங்குதான் குழந்தைகள் அதிகம் கற்க வேண்டும். வாழ்வியல் பாடங்களை வீட்டில் தான் கற்க முடியும். பள்ளியில் பாடங்களை எப்படி கவனமுடன் கற்க வேண்டும் என்பதை வீட்டில் பெற்றோர்கள் கூறிய பிறகுதான் குழந்தை கற்கும். அது போலவே பள்ளியில் நடக்கும் அனைத்தையும் பகிரும் இடம்  வீடுதான் ஆகவே வீடு என்ற பல்கலைகழகம் வீட்டில் உள்ள உறவுகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை பெற்றோர்கள்  முதலில் கற்பிக்க வேண்டும். 

உணவினை மென்னு முழுங்குதல் உணவு சாப்பிடும் முன்பும் பின்பும் தண்ணீர் குடித்தலை தவிர்த்தல். பொருட்களை சுத்தமாக வைத்து கொள்ளுதல்  போன்ற பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது முதல் கடமையாகும். 

ஆடம்பர வாழ்க்கை விட சிறந்தது அன்பான வாழ்க்கை: 
ஆடம்பர வாழ்க்கையை விட சிறந்தது  அன்பான வாழ்க்கை மற்றும்  இருப்பத்தை வைத்து அனுசரித்து  வாழுதல், விருப்பங்களில்   இருக்க வேண்டிய நியாயமான  பண்புகளை கற்றுக்கொடுங்கள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து சிறந்த தந்தை எனப் பெயர் வாங்குவதை விட தேவையானதை வாங்கி கொடுத்து வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் தந்தையே சிறந்தவர். அன்புடன் அனுசரித்து வாழக் கற்றுக்கொடுக்கும்  பெற்றோர்களின் குழந்தைகள் வாழ்வியலின் அருமை பெருமைகளை உணர்ந்து வாழ்க்கையை வளமாக்கும். ஆடம்பரமாக ராஜாவா வாழும் குழந்தைகள் வாழ்வியலிருந்து  தடம்புரண்டு தடுமாறுவார்கள் அப்பொழுது நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆகையால் குழந்தை வளர்ப்பு என்பது பொருப்புடன் இணைந்த கடமை அதனை செவ்வனே ஆற்ற வேண்டியது பெற்றோர்களின்  கடமையாகும். 

மதிபெண்களை எடுக்கும் புத்தக புழுவாக பிள்ளைகளை மாற்றாதீர்க்ள் புத்தகங்களை புரிந்து படித்து வாழ்க்கைக்கு பயனுள்ளதாக்கும் என்பதை உணர்த்துங்கள்.   வேர்வை சிந்த விளையாட கற்றுக் கொடுங்கள். வீட்டில் செடி கொடிகளை நட்டி வளர்க்க கற்றுக் கொடுங்கள் நீரை எவ்வாறு செடிகளுக்கு ஊற்றுவது என்பதை கற்றுக் கொடுங்கள். கழிவு நீரை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது வீட்டிலே கொத்து மல்லி,  புதினா, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய்,  ரோஜா, சாமந்தி, மரம் வளர்த்தல் கலையை கற்றுக் கொடுங்க. பூக்கள், காய்கள், கனிகளின் அருமை பெருமைகளை கதை கதையாய் கற்றுக் கொடுங்கள். 

விடுமுறையில் தாத்தா பாட்டியுடன் தங்க வைத்து உதவ கற்றுக்கொடுங்கள். பெரியோர்களுடன் குழந்தைகளையும் அழைத்து வாக்கிங் போங்க அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் பழக கற்றுக்கொடுங்கள் அக்கம் பக்க பிள்ளைகளிடம் அனுசரித்து நடக்க வேண்டிய முறைகளை கற்றுக் கொடுங்கள்.

மற்ற பிள்ளைகளுடன் உங்கள்  வீட்டு பிள்ளைகளை நீங்கள் கம்பேர் செய்து பேசாதீர்கள். குழந்தைகளின் தனித்தன்மையடையவர்களாக  இருக்க வையுங்கள். கல்வியுடன் மற்ற திறன்களை உடையவர்களாக குழந்தைகளை வளர்த்து விடுங்கள். நம்பிக்கையுடையவர்களாக  போராட்ட குணமுடையவர்களாக குழந்தைகளை உருவாக்குங்கள். 

Post a Comment

0 Comments