மத்திய அரசின் ஆட்சிப்பணி ஆணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினை தகுதியுடையோர் பயன்படுத்தலாம். யூபிஎஸ்சியின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 13 ஆகும்.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட யூபிஎஸ்யில் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர் மற்றும் லெக்சரர் போன்ற பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்
|
அட்மின்
ஆபிசர்
|
வயது வரம்பு
|
35 வரை
|
கல்வித் தகுதி
|
டிகிரி பட்டப்படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
13
|
சம்பளம்
|
ரூபாய்
15,600 முதல் 39,100
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
அட்மின் ஆபிசர் பணியிடங்கள் - 08
லெக்சரர் அப்ளைடு மெக்கானிக்ஸ் பிரிவு-01 பணி
லெக்சரர் கெமிக்கல் இன்ஜினியரிங்- 02 பணியிடங்கள்
லெக்சரர் சிவில் இன்ஜினியரிங்- 01 பணியிடம்
லெக்சரர் இன்பர்மேசன் டெக்னாலஜி பணியிடம் - 01 பனியிடம்
மேலே யூபிஎஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு சம்பளமாது மாதம் ரூபாய் 15, 600 முதல் 39100 வரை பெறலாம்.
கல்வித் தகுதி:
டிகிரி பட்டப்படிப்பு, மெக்கானிக்கல்/ சிவில்/ கெமிக்கல்/இன்பர்மேசன் டெக்னாலஜி/ இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
யூபிஎஸ்சியின் பணிவாய்ப்பினை பெற 35 வயதுள்ளோர் வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். நேரடி தேர்வினை முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய ஆட்சிப் பணி ஆணையத்தில் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 25 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் அக்டோபர் 10, 2018 ஆகும்.
விண்ணப்பிக்க முறை:
ஆன்லைனில் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக படித்துப் பார்த்து கொடுக்கப்பட்டுள்ள விவிரங்களை கொடுத்து அவற்றினை சரிப்பார்த்து சப்மிட் செய்யவும். மேலும் யூபிஎஸ்சியின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையோர் தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் கோப்புகளை அப்லோடு செய்ய வேண்டும்.
0 Comments