டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் ஹைலைட்ஸ் பகுதி 4!

குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் பாடக் குறிப்புகளின் தொகுப்பு சிலேட் குச்சி இந்தியா கொடுத்துள்ளது பொது அறிவு பாடத்தில் முக்கிய பங்கு வகிக்கும்  அறிவியல் பாடப்பகுதிகளின்  குறிப்புகளை கொடுத்துள்ளோம்.  


செல்லை கண்டறிந்தவர்- இராபர்ட்ஹூக்  1665 
செல்லின்  உட்கருவை கண்டறிந்தவர் - இராபர்ட் பிரௌன் 
விலங்கு செல ஒரு யூகேரியாட்டிக் செல் வகையை சேர்ந்த்தது. 

விலங்கு செல்லின் உள்ள உறுப்புகள்: 
பிளாஸ்மா படலம்- செல்லைச் சுற்றி இருக்கும் செல்லுக்கு வடிவம் கொடுக்கும் செல்லுக்குள் தேவையானவற்றை மட்டுமே அமைந்திருக்கும். 

புரோட்டோ பிளாசம்  இதில் சைட்டோ பிளாசம் செல்லின் உட்கரு இரண்டும் உள்ளது. புரோட்டோ பிளாசம் எனப் பெயரிட்டவர் ஜே. கே.பர்கின்ஜி 

சைட்டோ பிளாசம்: இதில் உட்கரு, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் மற்றும் இதர நுண்ணுறுப்புகள் காணப்படுகின்றன. 

உட்கரு- செல்லின் கட்டுப்பாடு மையம் இதன்  வடிவம் கோள வடிவம் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது இதன் வேலை ஆகும். 

மைட்டோ காண்ட்ரியா- செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுகின்றன. 

கோல்கை உறுப்புகள்- உணவு  செரிமானம் அடைய நொதிகளை  சுரப்பதும் லைசோசோம்களை உருவாக்குவதும் இதன் வேலை ஆகும். உணவிலிருந்து புரதத்தைப் பிரிதெடுத்து செல்லுக்கும் உடலுக்கும் வலு சேர்ப்பது இதன் வேலையாகும். தாவர செல்லில் இதனை டிக்டியோசோம்கள் என்பர் 

எண்டோபிளாச வலை: செல்லுக்கும் உள்ளே இருக்கும் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் கொண்டு செல்வது  இதுதான் 

ரிபோசோம்கள் - புரதத்தை உற்பத்தி செய்வதால் செல்லின் புரதத் தொழிசாலை  என்பது இதன்  மறுபெயர் ஆகும். 

லைசோம்கள் - செல்லின் உள்ளே நுழையும் நுண்கிருமிகளைக் கொல்வதால்  செல்லின் தற்கொலைப் பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. 

சென்ட்ரோசோம்கள்- விலங்கு செல்லில் மட்டுமே காணப்படும் புதிய செல்கள் உருவாக்குவது இதன் பணி ஆகும். 

நுண் குமிழ்கள்- இதன் முக்கியமான வேலை சத்து நீரைச்  சேமிப்பது செல்லின் உள் அழுத்தத்தை  ஒரே மாதிரி பேணுவது இதன் பணியாகும். 

மனித உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும். 

எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை ஆகும். 

இரத்தம் சிவப்பு செல்களால் ஆனவை என்பதை  உலகுக்கு கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன்வான் லூவான்ஹாக் 1675 ஆகும். 

விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்பு  செல் ஆகும். 

இரத்தச் சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்கு செலகள் ஆகும். 

உயிரினங்கள் தோற்றம் எனும் புத்தகத்தை எழுதியவர் சார்லஸ் டார்வின் 1859 

சார்லஸ் டார்வின் உலகின் முக்கியத் தீவுகளைக் சுற்றிப் பார்த்த கப்பலின்  பெயர் எச்.எம். எஸ். பீகிள் 
கிராம பாஸ்ட்ரிங் ஒரு சிற்றினத்தை சார்ந்த குட்டியை மற்றொரு  சிற்றினத்தைச் சார்ந்த பெற்றோர் பராமரித்தல் குறுக்குப் பராமரித்தல் அல்லது கிராஸ் பாஸ்ட்ரிங என்று அழைக்கப்படுகிறது. எ.கா குயிலின் குஞ்சுக்களைக் காகம் பேணிப் பாதுகாத்தல் 

Post a Comment

0 Comments