டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் போட்டி தேர்வாளர்களே உங்களுக்கான ஒரு நல்ல செய்தியாக குரூப் 2 நேரடி தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வு:
குரூப் 2 தேர்வு முதன்மை, முக்கிய மற்றும் நேரடி தேர்வினை கொண்டது.
முதன்மை தேர்வு மூன்று மணி நேரம் மட்டும் எழுத முடியும். மொழி பாடம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் 100 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் என மொத்தம் 300 மதிபெண்கள் உடையது.
பணியின் பெயர்
|
டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 பணியிடங்கள்
|
வயது வரம்பு
|
21 முதல் 40 வயது வரை
|
கல்வித் தகுதி
|
எதேனும் ஒரு பட்டப்படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
1199
|
சம்பளம்
|
35,000-1,17,600/-
|
பணியிடம்
|
தமிழ் நாடு
|
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேரடி தேர்வில் வெற்றி பெறுவோர் முக்கிய தேர்வான மெயின்ஸ் தேர்வினை எழுத வேண்டும் மெயின்ஸ் தேர்வு விளக்கவுரையில் எழுத வேண்டும். மொத்தம் 340 மதிபெண்கள் உடைய தேர்வினை வென்றவர்கள், நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்திருந்தால் போதுமானது மேலும் அந்த தந்த பதவிகளுக்கு ஏற்ப முன்னுரிமை மாறுபடும். டைபிஸ்ட் பணிக்கு ஹையர் மற்றும் லோயர் முடித்திருக்க வேண்டும்.
குரூப் 2 இண்டர்வியூ தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சப்இன்ஸ்பெக்டர் கிரேடு2, அஸிஸ்டெண்ட் செக்ஸன் ஆபிசர், ஹேண்ட்லூம் இன்ஸ்பெக்டர், சீனியர் இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் அஸிஸ்டெண்ட், எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் போன்ற பணியிடங்கள் மொத்தம் 1199 பணியிடங்கள் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிதாக தேர்வுக்கு விண்ணப்பிபவர்கள் பதிவு கட்டணமாக ரூபாய் 150 செலுத்தி ஐடி பெற்று ஐந்து வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.
மேலும் முதன்மை மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு விண்ணப்ப கட்டணமாக 150 வீதம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணங்களை செலுத்தலாம்.
முக்கிய தேதிகள்:
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தொடக்க தேதி ஆக்ஸ்ட் 8, 2018 ஆகும்
மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 9. 2018 ஆகும்.
தேர்வு நாள்: 11.11.2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments