தற்பொழுது மழைகாலம் தொடங்கிவிட்டத்து ஆங்காங்கே மழையின் அளவு அதிகரித்து நீர் வரப்பு பெருகி கொண்டிருக்கின்றது. குளிர் காலத்தில் சளி தொல்லைகள் அதிகரிப்பு, சுற்றுப்புற மாசு பாதிப்பு அனைவருக்கும் அன்றாட வாழ்வில் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தும். இக்கால கட்டத்தில் வீட்டில் முன்னோர்கள் பயன்படுத்திய வைதியங்களை நாம் பயன்படுத்தலாம் இதன் மூலம் எளிதில் உடல் ஆரோக்கியம் பெற்று நலமுடன் வளமாக வாழலாம்.
சளித் தொல்லை நீங்க வீட்டு வைத்தியங்களை
எப்படி பயன்படுத்த வேண்டும். அதனை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டிய விவரங்களை முறைப்படி இங்கு தொகுத்துள்ளோம் படித்து பார்த்து பாருங்க.

பொதுவாக சளிகாலத்தில் வெல்லம். இஞ்சி, வெற்றிலை, பூண்டு, சின்ன வெங்காயம், ஆட்டுக்கால் சூப்பு, நாட்டு கோழி சாறு, தேன் போன்றவை மருந்தாக பயன்படுத்தப் படுகின்றது. அவற்றை எவ்வாறு எந்த முறையில் எவ்வாறு, எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முறையாக தெரிந்து பயன்படுத்துங்கள்.
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!
2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் ‘c’ இருக்கிறது.வைட்டமின் ‘c’ ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.
11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)
16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

17. காற்று மாசை தடுத்து சுத்தப்படுத்த வெங்காயத்தை படுக்கைக்கு அருகிலும் அறைகளில் ஓரங்களில் வைக்கலாம்.வெங்காயம் காற்றிலுள்ள மாசினை நீக்கி சுத்தாமான காற்றை சுவாசிக்க உதவுகின்றது.
18. வெங்காயம், முட்டை கோஸ், மிளகினை தொடர்ந்து உணவுடன் எடுத்து கொண்டால் அதன் மூலம் நெஞ்சில் உள்ள சளியை கரைக்கின்றது.
19. ஆட்டுக்கால் சூப்பு சளிகாலத்தில் குடிக்கும்பொழுது சளியிலிருந்து குணமடையலாம்.
20. வெற்றிலை சூப் வைத்து குடிக்க வேண்டும். வெற்றிலை, இஞ்சி, பூண்டு, மிளகினை வெல்லம் அல்லது பனங்கற்கண்டினை சூப்பாக கொதிக்க வைத்து காலை மாலை இரண்டு வேலை தொடர்ந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் எளிதாக சளியை சரிசெய்யலாம்.
21 நாட்டுட்டு கோழியை சாறு வைத்து குடித்தால் நெஞ்சு சளி சரியாகும்.

0 Comments