எஸ்எஸ்சி ( ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) என்பது மத்திய அரசின் இருக்கும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி அளவிலானோர்க்கு தேர்வுகளை நடத்துகிறது. அதில் CGL எனப்படும் கம்பைண்டு கிராஜூவேசன் தேர்வுக்கான மத்திய அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான குரூப் A,B,C,D பிரிவுகளில் (cadre) நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வானது டயர்-I,II,III,IV என்று நான்கு நிலைகளில் நடைபெறுகிறது.
டயர் ஒன்று Tier I :
கம்பைண்டு கிராஜூவேசன் தேர்வுக்கான டயர் ஒன்று தேர்வானது ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும். இது ஆன்லைன் மூலம் நடைபெறும் தேர்வு ஆகும். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. டயர் ஒன்று தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்கும். இந்த டயர் ஒன்று தேர்வானது 100 கேள்விகளைக் கொண்டது. இதற்கான மொத்த மதிப்பெண் 200 ஆகும். டயர் ஒன்றுக்கான ஒதுக்கப்பட்டுள்ள கால அளவானது 60 நிமிடங்கள் ஆகும். இதில் நாம் தவறாக விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 0.5 மதிப்பெண்கள் குறையும்.
துறைவாரியான கேள்விகள் மற்றும் மதிபெண்கள்:
Paper
|
Subject
|
No. of
Questions
|
Maximum
Marks
|
Duration
|
1.
|
General Intelligence
& Reasoning
|
25
|
50
|
60 minutes
(For Visually
Handicapped
Candidates
Only the duration is
80 minutes)
|
2.
|
General Awareness
|
25
|
50
| |
3.
|
Quantitative Aptitude
|
25
|
50
| |
4.
|
English
Comprehension
|
25
|
50
| |
Total
|
100
|
200
|
தேர்வில் நாம் எப்படி வெற்றி பெறுவது:
இந்தத் தேர்வில் நாம் எப்படி வெற்றி பெறுவது? இதில் கணிதம் பகுதிகளான திறனாய்வு, குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட் ஆகிய இருபகுதிகளில் 50 கேள்விகளைக் கொண்டது. இந்த இரு பிரிவுகளுக்கு நாம் எவ்வளவு வேகமாக விடை அளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இந்த இருபகுதிகளுக்கு விடையளிக்க 35 முதல் 40 நிமிடங்கள் வரை தேவைப்படும், ஆனால் இந்த பகுதியை நாம் 30 முதல் 35 நிமிடத்திற்குள் முடித்தாக வேண்டும்.
ஆங்கிலம் பகுதியிலுள்ள கேள்விகள் ஒரு பெரிய பத்தியாக கொடுத்து இருப்பார்கள் அதில் 3 முதல் 5 கேள்விகள் வரை கேட்கலாம். இது போன்ற கேள்விகளை நாம் புரிந்து விடையளிக்க அதிக நேரம் தேவைப்படும். ஆகையால் நாம் அப்பகுதிக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும். இப்பகுதியை நாம் எவ்வளவு விரைவாக விடையளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் கடைசி பகுதியான பொதுஅறிவு பகுதியிலுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை விரைவாக கூறவேண்டிய நிலையில் இருப்போம். அதற்கு குறைந்த பட்சம் 10 முதல் 12 நிமிடங்கள் பிடிக்கும்.
இரண்டு பகுதிகள்(ஆங்கிலம் மற்றும் பொது அறிவு) மதிபெண் உயர்வதற்கு மிகவும் முக்கியம். இவ்வாறு நாம் நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெற நேர மேலாண்மை மிகவும் அவசியம். நாம் இந்தத் தேர்வில் தகுதிபெற குறைந்தது 80 கேள்விகளுக்காவது சரியான விடையை அளித்திருக்க வேண்டும். ஆகையால் நமக்கு தெரியாத வினாவினை ஆரம்பத்திலே ஸ்கிப் செய்ய வேண்டும்.
நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளவும்:
எந்த ஒரு கேள்விக்கும் 1 நிமிடத்திற்கு மேல் செலவிடக் கூடாது. இவை அனைத்தையும்விட மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் பதட்டமடைந்து விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் தவறினால் நமக்கு நன்றாக தெரிந்த கேள்விகளுக்கூட சரியான விடையை அளிக்க முடியாமல் போகலாம்.
சரியாக இன்னும் 30 நாட்கள் உள்ளன. தேர்விற்கு தேவையான அனைத்துப் பகுதிகளையும் அடுத்தடுத்து பதிவிட உள்ளோம். படித்து பயன் பெறவும். தேர்வு எழுதும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எங்கள் பதிவுகளை உடனுக்குடன் அறிய சிலேட்குச்சி பக்கத்தில் உள்ள நோட்டிபிகேசனை சப்கிரைப் செய்யவும்.
எஸ்எஸ்சி தேர்வுக்கான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் மேலும் தேவையான தகவல்களை இங்கு பெறலாம்.
Written By Toll Free.N
எஸ்எஸ்சி தேர்வுக்கான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் மேலும் தேவையான தகவல்களை இங்கு பெறலாம்.
Written By Toll Free.N
0 Comments