பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை!


மாணவர்களுக்கான வித்யதன் கல்வி உதவித்தொகையை சரோஜினி தாமோதரன் அரக்கட்டளை மூலமாக  வழங்கப்படுகின்றது. பத்தாம் வகுப்பு படித்து முடித்த மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யதன் அறக்கட்டளை வழங்கும் வித்யாதரன் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

கேரளா கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 1,500க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு வித்யதன் கல்வி உதவித்தொகை வழங்க ஆரம்பித்தது. தற்போது 332 மாணவர்கள் இக்கல்வி தொகையைப் தமிழ்நாட்டில் பெற்று வருகின்றனர்.

கல்வி தொகையானது ரூபாய் 10,000 முதல் 60,000 வரை படிப்பு படிக்கும் காலத்திற்கேற்றார் போல் வழங்கப்படும். இதனை பெற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொகையாக ரூபாய் 6000 வழங்கப்படும்.

தகுதிகள்:
வித்யதன் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு இரண்டு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் 90 சதவீதம் அல்லது ஏ ப்ளஸ் கிரேடு பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்களின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் திறனாய்வு தேர்வு, நேரடி தேர்வு மூலம் தகுதிப் பெறுவோர்கள் ஸ்காலர்ஷிப் பெறலாம். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயணச் செலவுகள் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:
ஜூன் 30,2018 தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஜூலை 30ஆம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும்.

மாணவர்கள் சமர்பிக்க வேண்டியஆவணங்கள்:
பத்தாம் வகுப்பு சான்றிதழ்,  வருமானவரி சான்றிதழ் மற்றும் புகைப்படம், மாணவர்களை தொடர்புகொள்ள மெயில் முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் அதிகாரப்பூர்வமான மெயில் ஐடியில் பதிவு செய்து வித்யதன் கல்வித் தொகை பெற தனிமெயில் ஐடி பெறலாம் அதற்கு ஜிமெயில் ஐடி வைத்து பதிவு செய்து  தனி கணக்கு தொடங்க வேண்டும். இக்கல்வித்தொகை பெற தமிழ்நாட்டிற்கான அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜூன் 30, 2018 ஆகும். 

ஜிமெயில் ஐடி மூலம் வித்யதன் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மெயில் ஐடியை இணைக்கலாம். மேலும் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணைப்பை பொறுமையாக படித்து விண்ணப்பியுங்கள் மாணவர்களே. 



Post a Comment

0 Comments