வாயை மூடி பேசுங்க வம்பு வளராது!

உங்கள் துணையிடம் எப்பொழுதும்  நம்பிக்கை வையுங்கள் கண்காணிக்கின்றேன் பேர் வழி என்று தவறாக கணித்து சிக்கலில் சிக்காதீர்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்காதீர்கள், அம்மாடியோவ் அப்புறம் இந்த ஆளை கையிலே பிடிக்க முடியாது என நீங்கள்  மனதுக்குள் சொல்வது கேட்கின்றது.


மனதிலிருந்து பேசுங்க:
ஒரு நடுத்தரவயது தம்பதியினர்  கணவன், மனைவி இருவரிடையே எப்பொழுதும் புரிதலற்ற போக்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. தம்பதியினரிடையே அன்பு ஆறுதல் இல்லாத போக்கு இருந்தது.  நடுத்தர வயது குடும்பத்து கணவர் பெயர் பரத் எப்பொழுதும் தன் மனைவியான லட்சுமியை குறை சொல்லி கொண்டிருப்பதனையே வழக்கமாக வைத்திருப்பார். இதனால் கணவர் வீட்டில் இல்லாத பொழுது மட்டும் சற்று நிம்மதியாக  தனிமையில் வாழ்ந்து வந்தார். ஆனால் லட்சுமிக்கு கொஞ்ச நாட்களில் அந்த சுதந்திரமும் பரி போவது போல் இருந்தது. ஆதலால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். பரத் தன்னுடைய வேளையில் இருந்து ஓய்வு பெற ஒரு மாதமே இருந்த காலம் அப்பொழுது லட்சுமி அவரின் சிடுசிடுப்பு பேச்சினையும் அத்துடன் இணைந்த அவர் கூறும் குறைகளையும் எண்ணி வருந்தி கொண்டிருந்தார். அதனை அறிந்த லட்சுமியின் தோழி  கணவரிடையே மனதிலிருந்து பேசுமாறு அறிவுறுத்தினார்.  கணவரிடம் அன்பு கலந்த அனுசரனையுடன் மனது மூலம் அன்பை பரிமாறும் நேரடி பேச்சினை விட  இந்த மனப்பரிமாற்றம் அவரை மாற்றம் அடையச் செய்யும் என தெரிவித்தார். முதலில் இது குறித்து அறியாத  லட்சுமி பிறகு கணவருடன் மனதில் உரையடல் நிகழ்த்தினார். தொடர்ந்து செய்த மனப்பரிமாற்றம் கனவரின் அனுகுமுறையில் மாற்றம் துளிர ஆரம்பித்தது.

வாயை முடி பேசவும்: 
மனதிலிருந்து லட்சுமி தனது கணவர் பரத்திடம், "என்னங்க என்கிட்ட அன்பா இருங்க, நான் செய்யும் தவறை அமைதியாக சுட்டிக்காட்டுங்க,  நான் உங்கள் மனைவி அதையுணர்ந்து பேசுங்க. உங்களோடு இனி வரும் காலங்களில் நான் ஒன்றுபட்டு அன்போடு ஆறுதலுடன் வாழ ஆசைப்படுகிறேன், இவ்வாறு  தினம், தினம் மனதில் அவருடன் பேசினார். லட்சுமி தொடர்ந்து கணவரிடம் உள்ள நல்ல குணங்களை பட்டியலிட்டு மனதார மனசுக்குள் பாராட்டினார். லட்சுமியின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்ந்தது. அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தனது வாழ்க்கையை புதிதாக தொடங்குவது போல் உணர்ந்து  தோழிக்கு நன்றி கூறினார்.

வாயை மூடி மனதிற்குள் பேசும் பொழுது ஆழமான பரிவரித்தனைகள் நடைபெறுவதால் எவரையும் செயல்பட வைக்க முடியும்.  கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், அலுவலகத்தில் பாஸ், மேனேஜெர் என யாருக்காகவும் இந்த முறையில் பேசினால் எளிதாக சென்றடையும். தேவையற்ற வாய் வார்த்தைகளால் வம்பு வளர்ப்பதைவிட ஆழமான அன்பான போக்கால் கவனத்தை எளிதில் ஈர்த்து  உறவுகளுக்கிடையே நல்ல ஆரோக்கிய போக்கினை மலரச் செய்யலாம். 

நீங்களும் உங்கள் கணவர், மனைவி, மற்றும் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் பெற்றோர்கள்,  என யார் வேண்டுமானாலும் பேசுங்க ஆனால் ஆழ்மனதிலிருந்து பேச வேண்டும். அப்பொழுதுதான் அது எளிதாக ரீச் ஆகும்.

மேலும் படிக்க:
நான் உன்னை நேசிக்கிறேன் என்ற அன்பான வார்த்தை போதும் !

Post a Comment

0 Comments