இடம் கொடுத்த இந்திய இதயங்கள் ஜொலிக்க தொடங்கிய கால்பந்து போட்டி !

இடம் கொடுத்த இந்திய இதயங்கள் ஜொலிக்க தொடங்கிய கால்பந்து போட்டி, வருண பகவானின் அருளுடன் இந்திய கால்பந்தணி வெற்றியுடன் தனது இண்டர்காண்டினெண்டில் கால்பந்து  இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 



இந்திய கால்பந்தணியுடன் சுனில் சேத்ரியின் 100-வது போட்டி: 
இந்தியகால்பந்தணி மும்பையில் நடைபெறும் இண்டர்காண்டினெண்டில் போட்டியில் விளையாடி கென்யாவை வென்று இறுதிபோட்டியில் தகுதி பெற்றது. இந்திய கால்பந்தணி கேப்டன் சுனில் சேத்ரி  தனது 100 நூறாவது போட்டியில் வருண பகவானின் ஆசியுடன் திறன்பட விளையாடி வெற்றியுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று நுழைந்துள்ளனர். கென்யாவை தோற்கடித்து 3-0 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்றது இந்திய கால்பந்தணி.

அரங்கம் நிறைந்த மக்கள்: 
நேற்றைய போட்டி சுனில்சேத்ரிக்கு மட்டுமல்ல இந்திய  விளையாட்டு ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமான நாளாக அமைந்தது. மழையுடன் இணைந்து விளையாடி கென்யாவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி. சுனில்சேத்ரியின் வேண்டுகோளை ஏற்று  பெரும்பாலான ரசிகர்கள் நேற்றைய போட்டியை நேரடியாக கண்டுகளித்தனர். 

போட்டியை வென்ற சுனில் சேத்ரி மக்கள் ஆதரவுடன்  போட்டியை வென்றதுடன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நாட்டுக்காக உயிரையும் கொடுத்தும் விளையாடுவோம் என்று தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

தொடங்கப்பட வேண்டிய அங்கிகாரம்: 
இந்திய கால்பந்தணிக்கு நேற்று ரசிகர்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட ஆதரவு பெரும் வரவேற்புக்குரியது. அது தொடர வேண்டும்  இத்துடன் இணைந்து மற்ற போட்டிகளுக்கும்  ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். 

கண்டெடுக்கப்பட வேண்டிய விளையாட்டு வீரர்கள்: 
இந்தியாவில் திறன்களுக்கு  பஞ்சம் இல்லை ஆனால் அதனை கண்டுபிடிக்த்தான்  சரியான அனுகுமுறைகள் இருப்பதில்லை. இந்திய தெருக்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சச்சினுகளும், சுனில் சேத்ரி, சானியா என பல திறன்வாய்ந்த வீரர்கள் அதிகம், ஆனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க  வேண்டிய பொறுப்பினை பொறுப்பானவர்கள் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க: 

கால்பந்து கேப்டன் கதறல் இடம் கொடுக்குமா இந்திய இதயங்கள்

Post a Comment

0 Comments