கால்பந்து கேப்டனின் கதறல் இடம் கொடுக்குமா இந்திய இதயங்கள்

கால்பந்தின் கேப்டன் சுனில் சேத்ரியின் உருக்கமான வீடியோ இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயங்களை துளைத்தது. ஒரு உண்மையான விளையாட்டு வீரரின் இந்த ஆதங்கம் இந்திய விளையாட்டுத்துறைக்கும் ஒரு சவால்தான். இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியின் உருக்க உரையானது விளையாட்டே பிடிக்காதவர்கள் இதயத்திற்குள்ளும் விதைத்திருக்கும். 


யார் இந்த சுனில்சேத்ரி: 
இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்களின் கேப்டன் அர்ப்பணிப்பும் ஆக்ரோசமும் கொண்டு விளையாடும் சுனில் சேத்ரி ஐரோப்பிய வீரர்களுக்கு  சமமாக விளையாடும் திறன் கொண்டவர். சர்வதேச் கால்பந்து போட்டிகளில் அதிகமான கோல் அடித்தவர்கள் வரிசையில் 59 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். 

உலக அரங்கில் 3-வது தரவரிசை: 
உலக அரங்கில் 3வது தரவரிசை பெற்றுள்ளார். அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி முதலிடம் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ இரண்டாவது இடம், சுனில் சேத்ரி 3வது இடம் இதனை இந்திய ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அணியில் கூலாக செயல்படும் தோனிக்கு நிகரானவர் சுனில் சேத்ரி  இதனை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனியாவது  அங்கிகரிப்போம் ஆதரவு கொடுப்போம். ஒரு சிறந்தவீரரை கொண்ட அணியானது சர்வதேச அணியில் 97-வது இடத்தில் உள்ளது என்பது துரதிஷ்டவசமானது ஆகும். 

இண்டர்கான்டினெண்டில் கோப்பை கால்பந்து போட்டிகள்: 
மும்பையில் கண்டங்களுக்கு இடையேயான நடைபெறும் கால்பந்து போட்டியில் இந்தியா, கென்யா, சீன தைபே  அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 

ஹாட்ரிக் கோலுடன் இந்தியா முதல் போட்டியில் வெற்றி:
இந்தியா விளையாடிய தனது முதல்  போட்டியில் சீனா தைபே அணியை  5-0 கோல் கணக்கில் வென்றது, இப்போட்டியில் சுனில்சேத்ரி  ஹாட்ரிக் கோலினை அடித்தார். 99வது ஆட்டத்தில் விளையாடிய சேத்ரி  இப்போட்டியினை வெற்றியுடன் தொடங்கி வைத்துள்ளார், 

சுனில் சேத்ரியின் உருக்கமான உரை: 
100வது போட்டியில் இன்று விளையாடும் சுனில் சேத்ரியின் நேற்றைய உருக்கமான வீடியோ உரை இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கெல்லாம் நெகிழ்வினை உண்டாக்கியது. சுனில் சேத்ரியின் 100வது விளையாட்டு போட்டியில் விளையாடும் மகிழ்வைவிட நாட்டு மக்களிடம் "கால்பந்து விளையாட்டுக்கும் ஆதரவு கொடுங்கள், கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவினைப் போல் மற்ற இந்திய விளையாட்டுக்கும்  ஆதரவு கொடுங்கள். நேரில் களத்தில் கால்பந்து போட்டியினை கண்டு மகிழந்து,  விமர்சனம் செய்யுங்கள் விவாதம் செய்யுங்கள் இன்றில்லை என்றாலும் நிச்சயம் ஒருநாள் இந்திய கால்பந்து விளையாட்டு உலக அளவில் சிறந்து விளங்கும் உங்கள் ஆதரவு அதற்கு நிச்சயம் தேவை". என அவர் இந்திய ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். 


 இந்திய கிரிக்கெட்வீரர் வீராட் கோலி சுனில் சேத்ரிக்கு ஆதரவு: 
இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவினைப் போல் இந்திய காலபந்து அணிக்கும் இந்திய ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். "சுனில் சேத்ரியின் இந்த உருக்க உரை நெகிழ செய்தது நான் கால்பந்துக்கு ஒரு ரசிகனாக ஆதரவு தரவுள்ளேன் அவ்வாறு  இந்திய ரசிகர்களான நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் ". என வீராட் கோலி கொடுத்த டிவிட்டர் பதில் அனைத்து இந்திய ரசிகர்களையும் கவனைத்தை ஈர்த்தது. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக பாவிக்கப்பட்டவர் இந்திய கால்பந்தணிக்கு ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். சச்சினும் சொந்தமாக  கால்பந்தணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாய்சங் பூட்டியா ஆதரவு: 
இந்திய கால்பந்து போட்டியின் முன்னாள் கால்பந்து கேப்டன் பாய்சங் பூட்டியா இந்திய அணிக்காக பத்துவருடம்  விளையாடி 40 கோல்கள் அடித்துள்ளார். பூட்டியா சுனில் சேத்ரிக்கும் இந்திய கால்பந்தணிக்கும் எப்பொழுதும் தமது ஆதரவு உண்டென  கூறியதுடன் 2019 ஆண்டு நடக்கவிருக்கும் ஆசிய கோப்பையை வெல்ல தற்பொழுதுள்ள இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது, சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் சுனில் சேத்ரி ஒரு சிறந்த வீரர் அவரின் இந்த 100-வது போட்டியினையும் வாழ்த்தியுள்ளார். அணியின் சிறப்பான இந்த  பார்மினை பாராட்டியுள்ளதோடு சிறப்பான எதிர்காலம் இந்திய கால்பந்து அணிக்கு உண்டு என கணித்துள்ளார். 

இந்திய ரசிகர்கள்: 
உலக தரவரிசையில் சிறந்த வீரர் மற்றும் உலக அணியில் 97வது  இடம் கொண்ட இந்திய கால்பந்து அணிக்கு ஆதரவு நல்க அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களும் தயாராகி வருகின்றார்கள். இந்திய விளையாட்டு ரசிகர்களே உங்களின் ஆதரவையும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கொடுங்க. இதுதான சரியான தருணம் இதனை மறக்க வேண்டும். கிரிக்கெட்டினை போல் இன்னும் இந்த இந்த தேசத்தில் ஆதரவு கொடுத்து வளர்க்க வேண்டிய விளையாட்டுகள் பலவுள்ளன. அவற்றினை அடையாளம் கண்டு ஆதரவு கொடுப்போம், எதிர்கால இந்தியாவினை அனைத்து விளையாட்டிலும் எழுச்சி கொள்ள செய்வோம். இந்தியாவில் செஸ், வில்வித்தை, மல்யுத்தம், கால்பந்து, டென்னீஸ் போன்ற ஆதரவு தரவேண்டிய விளையாட்டுகள் நிறைய உள்ளன,

ஊடகங்கள் உறுதுணை கொடுக்க வேண்டிய விளையாட்டு: 
இந்திய கிரிகெட்டு அணிக்கு நிகராக வளர்த்து எடுக்க வேண்டிய பல விளையாட்டுகள் உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தி ஆதரவு தரவேண்டியது ஊடகங்களின் பணியாகும். ஊடகங்களுக்கு இணையாக இந்தியவில் கிரிக்கெட்டுக்கு நிகராக அனைத்து விளையாட்டு வீரர்களும் மதிக்கப்படவேண்டியவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதனை இந்திய ரசிகர்கள் உணரவேண்டிய தருணம் இது. இந்திய விளையாட்டுகள் ரசிகர்கள் ஆதராவால் ஒளிரும்.

Post a Comment

0 Comments