தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு  வேளாண்ப் பல்கலைகழகத்தில்  வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.


பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் லைபேரரியன், உடற் கல்வி இயக்குநர்
வயது வரம்பு
21 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணியிடங்கள் எண்ணிக்கை
6+4=10 அஸிஸ்டெண்ட் லைபரேரியன் 6 பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் 4 பணியிடங்கள்
சம்பளம்
ரூபாய் 15,600, முதல் 39,100+6000
பணியிடம்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியிடம் கொண்டது

கல்வித்தகுதி:
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களான உடற்கல்வி துணை இயக்குநர், அஸிஸ்டெண்ட் லைபரரியன் போன்ற பணியிடங்களுக்கான கல்வி தகுதிகள் முதுகலைப்பட்டம் அறிவியல் துறையில் பெற்றிருப்பதுடன் எம்பில், பிஹெச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

உடற்கல்வி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு பெற்றிருப்பதனுடன் 55% சதவீகிதம் மதிபெண்களுடன் விளையாட்டு சேர்ந்த பள்ளி, கல்லுரி, தேசிய அளவில் சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். உடற்தகுதி தேர்வில்  வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் நெட்/ஸ்லெட்/செட் போன்ற  தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.  


அஸிஸ்டெண்ட் லைபரரியன் பணியிடத்திற்கு லைபரரி சைன்ஸ் முடித்திருக்க வேண்டும். இன்பர்மேசன் சைன்ஸ் முடித்திருக்க வேண்டும். அறிவியல் பாடங்களுக்கு நிகரான பாடங்களில் 55% மதிபெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட்/ஸ்லெட்/செட் போன்ற  தேர்வுகளில் பதிவு செய்து எழுதியிருக்க வேண்டும். 

தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்பட்டப்பின் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேவைப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் விதிமுறையின் படி சம்ர்பிக்க வேண்டும்.  

விண்ணப்பம்:
விண்ணப்ப கட்டணமாக  பொது பிரிவினர் ஓபிசி பிரிவினர் ரூபாய் 1000 தொகை செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 750 செலுத்த வேண்டும்.  விண்ணப்ப தொகையை டிடியாக   டிஎன்ஏயு  கிளை, கோயம்புத்தூர் பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 25,2018 இறுதி என அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு ! 

Post a Comment

0 Comments