தமிழகத்தில் காவிரி நீர் பங்கீடு குறித்து பிரச்சனைகள் எப்பொழுதும் இருந்து வருவது வழக்கமாகும். ஆனால் காவிரி நதிநீர் பங்கீடானது 1892 முதல் தமிழகம் சென்னை மாகாணத்திற்கும், கர்நாடகா மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே தொடங்கியது.
1892 முதல் தொடங்கியது 1924 முதல் 50 ஆண்டுகளுக்கு இந்த நதிநீர் பங்கீடானது உடன்படிக்கையாக செயல்பட்டு வந்தது.
1947க்குபின்னும் உடன்படிக்கையின்படியே காவிரி நதிநீர் பங்கீடானது இருந்தது.
சுதந்திரதிரத்திற்குபின் :
இந்தியா சுதந்திரத்திற்கு பின்பும் காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த மாற்றம் இல்லா நிலையில் 1956 மொழிவழி மாநில மறுசீரமைப்புக்கு பின் கர்நாடாக பகுதியாக குடகு மாறியது,
1954 ஒன்றிய ஆட்சிப் பகுதியாக காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. புதுவையின் காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்து வந்தது.
கேரளா காவிரி நீரில் பங்கு:
1960களில் கேரளாவின் கபினி ஆறானது கேரளத்தில் அமைந்தது. கபினி ஆறானது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். கேரளா, புதுவை இரண்டும் நதிநீரில் பங்கு கேட்டு 1960 முதல் 10 ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.
தமிழக காவிரி:
கர்நாடக குடகு மலையில் காவிரி பிறந்தலும் வெறும் 6.80 லட்சம் ஏக்கர் பரப்பளவே காவிரிநீர் பாசனமாக கர்நாடகா பயன்படுத்தி வந்தது. தமிழகத்திலோ 25.8 ஏக்கர் நீர்ப்பாசன பரப்பு இருந்து வந்தது.
வழக்குகள்:
1970முதல் உச்சநீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்படுவதும் தண்ணீர் தொடர்பாக நான்கு மாநிலங்களில் சச்சரவுகளும் அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்து 40 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
நடுவர் மன்றம் மற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பும். அரசியல் அமைப்பு விளக்கங்கள் என்னதான் கூறினாலும், சுயநலவாதிகளான அரசியல் வாதிகள், ஒற்றுமையை விரும்பா கூட்டத்தினாரால் தமிழ்நாடும், கர்நாடகாவும் தொடந்து முட்டலில் ஈடுப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வன்முறை:
பெரும்பாலான ஊடகங்கள், பிரிவினைவாதிகள், அரசியல்வாதிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே தொடர்ந்து சிக்கல்கள் வன்முறைகளை உண்டாக்கி குளிர்காய்கின்றன. ஆனால் தமிழகம் மற்றும் கர்நாடாகவின் நீர் பிரச்சனைக்கு சுமுக தீர்வு எட்டப்படாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் சதியே காரணமாகும்.
H2O ஹெச்2ஓ அன்று, சிம்பு இன்று:
கர்நாடகவில் மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவின் சிறந்த இயக்குநராக இருக்கும் உபேந்திரா அவர்கள் ஹெச்2ஓ என்ற தனது திரைப்படத்தின் மூலம் காவிரி நதிநீர் இருவருக்கும் சொந்தம் என்று தெளிவாக 2002ல் இயக்கிய படத்தில் தெரிவித்திருப்பார். இருவரும் சண்டையிட்டு கொள்வது தவறு என்று விளக்கியிருப்பார்.
இன்று கர்நாடகத்தின் சிறந்த இயக்குநரும், நடிகருமான உபேந்திராவும் பிராஜ்க்யா என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மக்களுக்கு சேவை செய்யும் ஒற்றுமை உணர்வை பேணும் இவரை போன்றோர்க்கு வெற்றி கிடைக்கும் பொழுது நதிநீர் பங்கீடு சிக்கல் இருக்காது என்ற இருதரப்பு மக்களின் நலம் பேணும் மக்களிடையே நிலவும் பொதுகருத்தாகவுள்ளது.
சிலம்பரசன் தமிழக சினிமா நடிகர்ளுள் ஒருவராவர் இன்று 2018 இவரும் இதே ஒற்றுமை பாணியை கடைபிடித்து காவிரி மக்களிடையே ஒற்றுமை இருக்கின்றது என்பதை சமூக வலைதளம் மூலம் உணர்த்தியிருக்கின்றார். இத்தகைய சிந்தனைகள் வரவேற்க தக்கது. இவருடைய வேண்டுகோளுக்கு கர்நாடக மக்களும் ஆதரவு அளித்துள்ள செயலானது ஆறுதளிக்கின்றது
அமைதி ஒற்றுமை:
ஒற்றுமை மற்றும் அமைதியின் மூலம் காவிரி நதிநீரினை பங்கீடலாம் என 2002இல் உபேந்திராவும் இன்று சிலம்பரசன் என்ற நடிகரும் வலியுறுத்தும் இந்த தருணத்தில் மக்களிடையே தேவையற்ற கிளர்ச்சியை ஏற்படுத்தி கர்நாடக, தமிழகம் இடையேயுள்ள உறவை பாதிக்கச் செய்ய மக்களை தூண்டிவிட கர்நாடகா மற்றும் தமிழகத்திலுள்ள சுயநலவாதிகள் அரசியல்வாதிகள் தயாராகிவருகின்றர், நடுவில் பெரும்பாலான ஊடகங்களும் இவற்றினை மேலும் பெரிது படுத்துகின்றன.
மக்கள் பார்வை:
கர்நாடக மற்றும் தமிழகத்திலும் ஒற்றுமை விரும்பாத அரசியல்வாதிகளை அடியோடு பிடிங்கி எரிய வேண்டும். தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் அரசியல் குழப்பங்களை அடியோடு பிடிங்கி எறிய முன்னின்று செயல்படுவோம். ஆவேச போக்கால் யாருக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.
சில சமூகநல போராட்டவாதிகளின் துணிச்சல்போக்கு என்ற பெயரில் பொதுமக்கள் பலியிடப்படுகின்றனர். இந்த தேவையற்ற போக்கை நிறுத்த வேண்டும். அமைதி காத்து ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள்ளது. மீண்டும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நம்பிக்கையில் இரு மாநில மக்களையும் ஒற்றுமை வழிநடத்தி இருப்பக்கமும் பசுமையை உண்டாக்கி நீர்வளத்தை பங்கீடுவோம்.
0 Comments